#Partnership ‛இத மட்டும் செஞ்சிடாதீங்க ஜெலன்ஸ்கி'
ஒயிட் ஹவுஸ் வந்ததுமே எச்சரித்த நபர்!
டிரம்ப் தூக்கி வீசும் முன்
இவ்ளோ நடந்து இருக்கா
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகப்பெரிய மோதல் வெடித்தது.
ஜெலன்ஸ்கி நினைத்திருந்தால் இந்த களேபரத்தை தடுத்திருக்க முடியுமாம்.
பேச்சு வார்த்தைக்காக ஓவல் ஹவுஸ் உள்ளே நுழையும் முன்பு, அவருக்கு டிரம்ப் நண்பர் ஒருத்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதை எல்லாம் ஜெலன்ஸ்கி தட்டி விட்டு சென்றதால் தான், வெள்ளை மாளிகையில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என்ற தகவல் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, அமெரிக்கா செய்த உதவிகளை உதாசீனப்படுத்துவது போல் ஜெலன்ஸ்கி பேசியது தான் மோதலுக்கு வித்திட்டது.
வார்த்தை யுத்தத்தின் ஒரு கட்டத்தில் ரஷ்யா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை ஜெலன்ஸ்கி அடுக்கினார்.
‛ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும். கடல் இருப்பதால் அமெரிக்கா பாதுகாப்பான இடத்தில் உள்ளது. ஆனாலும் உங்களுக்கும் ஒரு நாள் பாதிப்பு வரும்' என்று ஜெலன்ஸ்கி சொன்னார்.
இதை கேட்டதும் டிரம்ப் டென்ஷன் ஆனார்.
எங்களுக்கு என்ன நடக்கும் என்று பாடம் நடத்தும் இடத்தில் நீங்கள் இல்லை. உக்ரைனை பாதுகாக்க உங்களிடம் ஒன்றும் இல்லை.
நீங்கள் பல கோடி மக்களின் உயிருடன் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். மூன்றாம் உலகப்போருடன் விளையாடுகிறீர்கள் என்று டிரம்ப் விளாசினார்.
இன்னொரு பக்கம் ஜெலன்ஸ்கி மாறி மாறி வாக்குவாதம் செய்ததை சுட்டிக்காட்டி, நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது இந்த நாட்டை அவமதிக்கும் செயல்; அதிபரை அவமதிக்கும் செயல் என்று குற்றம் சாட்டினார்.
ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தை பாதியில் முடிந்தது. உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் உத்தரவு போட்டார்.
‛நான் சொன்னதை கேட்டு ஜெலன்ஸ்கி சுதாரித்து நடந்திருந்தால் அவருக்கு இவ்வளவு பெரிய அவமானம் நேர்ந்து இருக்காது.
அவர் அமெரிக்காவை அவமதிக்க வேண்டிய நிலையும் வந்து இருக்காது' என்று அதிர வைத்துள்ளார் அமெரிக்க எம்பி லிண்ட்சே கிரஹாம்.
இவர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மேல்சபை எம்பி. டிரம்புக்கும் நெருக்கமானவர்.
வெள்ளை மாளிகையில் டிரம்புடன் ஜெலன்ஸ்கி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சிறிது நேரம் முன்பு தான் இவர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசி இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறியது:
பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சிறிது நேரம் முன்பு ஜெலன்ஸ்கியை சந்தித்தேன்.
எந்த காரணத்தை கொண்டும் டிரம்பை சூடேற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
குறிப்பாக உக்ரைன் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் பற்றி தர்க்கம் செய்யாதீர்கள் என்றேன்.
ஆனால் அவர் கேட்கவில்லை. இவ்வளவு பிரச்னைக்கும் அவர் தான் காரணம்' என்று லிண்ட்சே கிரஹாம் சொன்னார்.
ஜெலன்ஸ்கி அமெரிக்காவை அமதித்து விட்டார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
அமெரிக்காவுடன் ஒத்துப்போகும், பிரச்னையை முடிக்க விரும்பும் ஒருத்தரை வெள்ளை மாளிகைக்கு அனுப்ப வேண்டும் என்றும் லிண்ட்சே கூறினார்.#Trump #Zelensky #whitehouse #Ukraine #USA