#Partnership ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற படாத பாடு படுகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதற்காக அவர் திரைமறைவு விடயங்களில் கூட இறங்கத் தயாராகிவிட்டார் என்பதை சமீபத்திய சம்பவம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அமைதி வேண்டும் என்பதற்காக நாட்டின் ஒரு சிறு பகுதியை கூட விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக நிற்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
இதனால் குறுக்கு வழியில் இறங்கியாவது தான் நினைத்ததை நடத்திவிட துடிக்கிறார் ட்ரம்ப்.
தான் சொன்னபடி தலை ஆட்டாததால் ஜெலன்ஸ்கியை ட்ரம்புக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஜெலன்ஸ்கியை முறைப்படி தேர்தல் நடத்தாத சர்வாதிகாரி என விமர்சித்திருந்தார்.
ஜெலன்ஸ்கியை அகற்றிவிட்டு, தனக்கேற்ப தலையாட்டும் ஒருவரை ஜனாதிபதியாக உட்காரவைக்கவும் டிரம்ப் விரும்புவதுபோல் தெரிகிறது.#Trumps #secret #talk #Ukrains #opposition #Zelensky #US #president |