அமெரிக்க அதிபர் டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் பகிரங்கமாக மோதியது உலக அரசியலை புரட்டிப்போட்டது.
போர் நிறுத்தம் பற்றி பேசும் போது ரஷ்யாவை குறை சொல்வதிலும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதிலுமே ஜெலன்ஸ்கி கவனமாக இருந்தார்.
இது டிரம்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
மாறி, மாறி தர்க்கம் செய்த ஜெலன்ஸ்கி ஒரு கட்டத்தில், ‛நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்; அமெரிக்காவையும் ஒரு நாள் ரஷ்யா தாக்கும்' என்றார்.
அவ்வளவு தான், கோவத்தின் உச்சிக்கே போனார் டிரம்ப்.# #Trump #Zelenskyy #USvsEU #ceasefireplan