#Partnership அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று அதிபராக பதவி ஏற்ற அன்றே டிரம்ப் சொல்லி இருந்தார்.
அடுத்த சில நாட்களில் பக்கத்து நாடுகளான மெக்சிகோ, கனடாவுக்கு தலா 25 சதவீதம் வரி விதித்தார்.
கூடவே, சீனாவில் இருந்து இறங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியுடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீதம் வரி போட்டார்.#USvsChina #TrumpvsXiJinping #tradewar