Thara murugan motivationl
Thara family:
தந்தை முருகனை மனதில் நினைத்து நம் வாழ்க்கை பயணத்தில் நமக்காக வாழ்ந்த மனிதர்களுக்கும்.. நம்மை வெறுத்து ஒதுக்கியவர்களுக்கும்.. நம்மை தாங்கும் இந்த பஞ்சபூதத்திற்கும்.. நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இந்த பிரபஞ்சத்திற்கும்.. நம் தகப்பன் சுவாமியாக விளங்கும் நம் அப்பா முருகனிடம் நன்றிகள் கூறுவோம்..
பிறர் நம்மை தூற்றினாலும் அவர்களையும் நம் முருகனிடம் பாதுகாக்க கூறுவோம். திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழா நமக்கு என்ன உணர்த்துகிறது, என்றால் நம் தந்தையாகிய முருகக் கடவுள் பகைவனையும் வென்று நண்பனாக்கி அவனுக்கும் வாய்ப்பு கொடுத்தவன்.நம் அப்பா முருகன் அத்தகைய கடவுளை வணங்கும்.. நாம் நம்மை துன்புறுத்தியவர்களை கூட நலமுடன் வாழ வேண்டும் என்று, நம் அப்பா முருகன்ிடம் பிரார்த்தனை வைப்போம். உண்மையாக அப்பா முருகனின் மனதில் நம் குடிகொள்ள சிறந்த வழி. முருகா என்று பெயர் சொல்லும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் முருகர் இருக்கிறார். உங்கள் இரு கரங்களும் முருகனின் பாதங்களை மட்டும் பற்றட்டும் பிறர் கால்களில் இறைவன் என்று நம்பி விழவேண்டாம். நம்புங்கள் இறைவன் முருகனே மனதால் 🙏🙏🙏💯