வாழ்க தமிழ் !!!!! வளர்க நாடகக்கலை !!!!!
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும்.
நாடு+அகம் =நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை.
ஆயகலைகள் அறுபது நான்கனுள் ஒன்று நாடகக்கலை.தமிழ் சினிமாவின் அடித்தளம் நாடகம்.
கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதே நாடகம்.
* 'இயல்' என்பது சொல் வடிவம்,
* 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
* 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர்.தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.
இந்த தமிழ் நாடகங்களை உலகின் ஓவொருவருக்கும் கண்டுகளிக்க செய்வதே எங்கள் நாடகத்தமிழ் டிவி சேனலின் நோக்கம் ஆகும்.
naadagathtamiltv@gmail.com