MENU

Fun & Interesting

YOGI RAMSURATKUMAR FOR ONE AND ALL

YOGI RAMSURATKUMAR FOR ONE AND ALL

பாரத தேசம் தெய்வீக புருஷர்கள் பலரை பெற்றெடுத்த தேசம். அதிலும் தமிழ்நாட்டில் வாழையடி வாழையாக தெய்வீக புருஷர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். கங்கை கரையில் அவதரித்து, கங்கையை தலையில் கொண்ட அண்ணாமலையான் வாழும் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் தான் பகவான் யோகி ராம்சுரத்குமார். எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லோரும் அவரை சுலபமாக அணுகி வாழ்க்கையில் பயன்பெற்றோர் பலர். அவருடைய தரிசனத்தால் வாழ்க்கை பலனுடையதாக ஆயிற்று. "*நம் அனைவருக்காமானவர் பகவான் யோகி ராம்சுரத்குமார்*"
என்ற இந்த Channel அவருடைய வாழ்க்கை, உபதேசங்கள், அனுபவங்கள் போன்ற பலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியால் என்னால் துவங்கப்படுகின்றது. இது YOGI RAMSURATKUMAR ASHRAMAM OFFICIAL WEBSITE கிடையாது. எல்லோரும் பூரண ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். இந்த CHANNEL -ன் ஒரே நோக்கம் இதை பார்பவர்களுக்கு எல்லாம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அருள் சென்று அடைய வேண்டும் என்ற ஒன்று மட்டுமே.
அருளாளன் R.குமரவேல்
சிவகாசி