1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை 32-ஆம் ஆண்டை நோக்கி சர்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
சென்னை மாங்காட்டில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் அஷ்டாங்க யோகக் கலைகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
குறிப்பாக நீரிழிவு வியாதிக்கு சிறந்த முறையில் அவரவர் உடல்நிலை, வயது, வியாதியின் தன்மைக்கேற்ப சிறப்பான யோகச் சிகிச்சை ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கப் படுகின்றது. எண்ணற்ற மக்கள் பரமகுரு ஸ்ரீ பதஞ்சலி தியானத் திருக்கோவிலில் அவர் முன்பாக இந்தக் கலைகளை கற்று நீரிழிவில் இருந்து நிரந்தர தீர்வு காண்கின்றனர். இரத்த அழுத்தத்திலிருந்தும் முதுகு வலியிலிருந்தும் நிரந்தர தீர்வு அடைகின்றனர்.
முதுகு வலி வியாதியை, சித்தர் பூமியான இந்தியாவில் சித்தர்கள் அளித்த யோகக்கலை மூலம் அறவே ஒழிக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் லட்சியம்.