ஆதி பிதா ஆதம் நபி தொடக்கம் இறுதித்தூதர் முஹம்மது நபி வரை தீனுல் இஸ்லாம் (சாந்தி மார்க்கம்) என்று எதை இவர்கள் மூலமாக இறைவன் எமக்கு அருளினானோ அதை தெளிவுபடுத்தி இறைத்தொடர்பை ஏற்படுத்தி முழுமையான தன்னிறைவை மனிதன் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இத்தளமாகும்.
அல்லாஹ்வின் பக்கம் நாம் செல்வதே நேரான பாதை தீன் என்பதன் அர்த்தம். இந்தப் பாதையில் போகின்ற மனித இனத்தையும் ஜின் இனத்தையும் தடைசெய்து நரகத்தை நிரப்புவேன் என ஷைத்தான் அல்லாவிடம் சவால் விட்டுயிருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நேரான பாதைதான் மிஃராஜ் எனும் வின்னுலக பயணமும் தீன் (மார்க்கம்) என்பதும் கூட என்பது நம்மில் அநேகருக்கு தெரியாது.
அந்த பாதையில் நாமும் சென்று அனுபவத்தை பெற்று லிகா எனும் இறை ஐக்கியத்தை பெறவேண்டும் என்ற நோக்கோடு இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உண்ணதமான கலிமாவைக்கொண்டு திக்கிர் என்ற தியானத்தில் ஈடுபட்டு ஸிறாத்தென்ற நேரான பாதையான வின்னுலக மிஃராஜ் பயணத்தை தங்களுடைய வாழ்க்கையிலும் அனுபவமாக பெற்று உண்மை முஃமினாக லிகா என்ற நிலையில் நிலைபெறுவது தான் இதன் நோக்கம்.
தொடர்புகளுக்கு : +94773005267 (WhatsApp)