MENU

Fun & Interesting

Thiruvadi TV

Thiruvadi TV

இந்த உலகில் 6 அறிவு உடைய உயர்ந்த தேகத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த தேகத்திற்கு மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய 5 அவஸ்தைகள் வராமல் காக்க வேண்டும். அதற்கு நாம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தை சார்ந்து, அவர் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் கடைபிடித்து, மேற்சொன்ன 5 அவஸ்தைகளிலிருந்து நாம் விடுபட்டு, திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரை போல பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடையவேண்டும். நாம் அப்படி அடைவது சாத்தியமே என வள்ளல் பெருமானார் கூறியுள்ளார். மரணமில்லா பெருவாழ்வாகிய பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடைய வள்ளல் பெருமானார் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் இந்த சேனலில் என் அறிவுக்கு எட்டிய வரை பதிவிடுகிறேன். அன்பர்கள் பார்த்து பயனுற வேண்டுகிறேன். அடியேனின் பிழைகளை மன்னித்து அருளவேண்டுகிறேன்.

Viewers, kindly support my channel by Subscribing, Liking, Commenting & Sharing.