நான் சித்ராதேவி ஆசிரியர். கவிஞர், எழுத்தாளர். நான் தொழில் முறை ஜோதிடர் இல்லை. 18 வயதில் ஆர்வமுடன் எனது குருநாதர் தெய்வத்திரு துரைசாமி அவர்களிடம் கற்றுக் கொண்ட ஜோதிடம். பல ஆண்டுகள் ஜோதிடராய் பிசியாக இருந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு ஜோதிடம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். கற்ற ஜோதிடத்தை நினைவு கூறும் ஒரு வாய்ப்பாக பிறருடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு அலாதி ஆனந்தம்.