மங்களகரமான குரு பூர்ணிமா தினத்தன்று, ஸ்ரீ சத்ய சாயி மீடியா மையத்திலிருந்து தமிழ் பேசும் நேயர்களுக்கென்று பிரத்யேகமாக ஸ்ரீ சத்ய சாயி தமிழ் என்ற ஒரு புதிய தமிழ் யூடியூப் அலைவரிசை வெளியிடப்பட்டது.
இது ஆசிய ஒடையில் வரும் ஒரு மணிநேர தமிழ் ரேடியோ சாயி ஒலிபரப்பின் 10வது ஆண்டு விழாவையும், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 95வது பிறந்த நாள் விழாவையும் முன்னிட்டு அவர்களுடைய பொற்பாத கமலங்களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.
ஸ்ரவணமஞ்சரி (Audio Book), தெய்வத்தின் அருளுரை (Divine Discourse), பஜனை பயிற்சி வகுப்பு, பக்தர்களின் அனுபவங்கள் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் ஸ்ரீ சத்ய சாயி தமிழ் யூடியூப் அலைவரிசையில் இடம்பெற உள்ளன. ஸ்ரீ சத்ய சாயி மீடியா மையத்திலிருந்து வரும் இந்த யூடியூபிற்கு பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்