Lovely Lotus Petals (அழகான தாமரை இதழ்கள் )
அனைவருக்கும் வணக்கம்,
நான் கடந்த 20 வருடங்களாக ஜோதிடம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதில் நான் கண்டு அறிந்த தகவல்களை ஒன்றாக திரட்டி காணொளியாக வெளியிட்டு வருகிறேன். நம்மை பற்றி நாம் புரிந்து கொண்டாலே வெற்றிதான். நம்மை பற்றி நமக்கே பல விஷயங்கள் தெரிவதில்லை. ஒவ்வொருவரும் தங்களை பற்றி புரிந்து கொள்வதற்கு வசதியாக எளிய முறையில் என்னால் முடிந்த வரை தகவல்களை சொல்லி உள்ளேன். இந்த காணொளியை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். தவறு இருந்தால் திருத்தி கொள்கிறேன்.
''வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத்தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வும் அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
தாமரை வேர் தனக்குத் தேவையான தண்ணீர் தவிர ஒரு சொட்டு கூட அதிகமாக எடுத்துக்கொள்ளாது. பூவின் மேலும், இலையின் மேலும் தண்ணீர் பட்டாலும் முத்துப்போல் உதிர்த்து விடும்.
அது போல் நாம் எவ்விடத்தில் பிறந்தாலும் தாமரை இலை நீர் போல் பிறருடைய உழைப்பை பறிக்காமல் தெய்வ பக்தியோடு இருந்தால் நம் வாழ்வு மேம்படும்.