விழிப்புணர்வு விபத்தினை தடுக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வு இன்பத்தினை தரும். இல்லாதோருக்கு இயன்றவரை உதவி செய்து வாழ்வோம். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு நம் வாழ்வியலை மேம்படுத்துவோம். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு இயன்ற உதவிகளை செய்வோம். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை போக்குவரத்து விதிகளை மதித்து நாம் விபத்தின்றி வாழ்க்கை நடத்துவோம். தாய்மொழி தமிழை மறவாமல் இயன்ற வகையில் அடுத்த சந்ததிகளுக்கும் கொண்டு சேர்ப்போம். இந்த உலகில் நாம் வாழும் காலம் என்பது பூமி எனும் பேருந்தில் நாம் ஒரு பயணிகள் போலத்தான் பயணம் முடிந்தவுடன் இறங்கி விட வேண்டும். நமக்குப் பின்னும் இந்த சமுதாயம் நன்றாக வாழ்வதற்காக நல்ல நிலையில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்திறமையை இந்த இயற்கை படைத்துள்ளது. அதை உணர்ந்து அதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு நம்மால் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து செல்வோம். இந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா என தெரியாது அதனால் கிடைத்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வாழ்ந்த பின்னும் நம் பெயர் சொல்லும் படி வாழ்ந்து செல்ல வேண்டும் . வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.