அருட்பா அமுது - 𝔸ℝ𝕌𝕋ℙ𝔸 𝔸𝕄𝕌𝔻ℍ𝕌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருட்பா பாடகி A அன்னபூரணி ஆகிய நான் 20 வருடங்களுக்கு மேலாக புதுவை மற்றும் தமிழகமெங்கும் மேடைகளில் சிதம்பரம் ராமலிங்கம் என்ற அருட் பிரகாச வள்ளலாரின் பாடல்களை பாடி, அதன் கருத்துகளையும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன். இந்த சேவயை பாராட்டி புதுவை அரசு எனக்கு 2023ம் ஆண்டு 'கலைமாமணி' விருது வழங்கி கவுரவித்தது.
‘அருட்பா அமுது’ சேனல் மூலமாக இந்த சேவையை உலக மக்களுக்கு கொண்டுசெல்கிறேன்.
அருட் பிரகாச வள்ளலாரின் ஏறக்குறைய 6000 பாடல்களிலும் ஜீவகாருண்யம், அருட்பெருஞ்ஜோதி, மரணமில்லா பெருவாழ்வு, சமரச சுத்த சன்மார்க்கம், ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் மனிதர்களை நேசித்தல், உலகத்து உயிர்களையெல்லாம் பேதமில்லாமல் அன்பு காட்டல் போன்ற உன்னதங்கள் வலியுறுத்தப்படுகிறது. இந்த பாடல்களும் கருத்துக்களும் உலகத்து மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக அழுத முகங்களை சிரித்த முகமாக்குவதே இந்த சேனலின் முக்கிய குறிக்கோளாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!