பா.இனியவன்,
கவிஞர், பாடலாசிரியர்!
குறிஞ்சிபாடிய புலவன் கபிலன் தன் இறுதி நாட்களில் வாழ்ந்ததாக அறியப்படும் திருக்கோவிலூரில் பிறந்தவர், தமிழின் மீது கொண்ட காதலால் சென்னைப் பல்கலைக்கழத்தில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.
பாரதியாரின் கவிதைகளால் தன் பதின் வயதுகளின் துவக்கத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், தானும் அவர்போல் எழுத வேண்டும் என்கிற ஆசையோடு எழுத துவங்கினார், பின்னாளில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பழநிபாரதி, முத்துக்குமார் போன்றோரின் திரைப் பாடல்களாலும் பெரிதும் கவரப் பட்டார்.
2008ஆம் ஆண்டு இவரின் மூன்று கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தற்போது திரைப்டங்களிலும் தன் பயணத்தை துவங்கியுள்ள இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
காலம் தாண்டி காற்றில் வாழும்
பல நல்ல பாடல்களை எழுதவேண்டும் என்பதே இவரின் கனவு !