**நல்லா இருக்கனும் நீங்க**
பைசா செலவு இல்லாமல் நான் உங்களை குணப்படுத்துகிறேன்..
இயற்கை மருத்துவம் ஆக்கபூர்வமானது. மனிதனின் உடல் நலம், மன நலம், கட்டுபாடு, உணர்வு, ஆன்மீகம், ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்த பின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்திடும்.
இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது. இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இது சாத்தியமானதாகும்.
உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன; விவாதங்களும் துவங்கி உள்ளன.
நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும் தான்.