என் வாழ்நாளில் புனிதர்களோடு ஏற்பட்ட பயணம் தொடர்வண்டிகளில் அடுத்தடுத்த பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவது போன்று என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அடுத்தடுத்து என்னோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதை அறிகிறேன். புனிதர்கள் நம் நண்பர்கள். நம் தோழர்கள். வழிகாட்டிகள். ஆசிரியர்கள், பரிந்துரையாளர்கள். துணையாளர்கள், முன்மாதிரிகள். ஆலோசனையாளர்கள். விண்ணகவாழ்வை நோக்கிய நமது பயணத்தில் புனிதர்கள் பாதையாய் பாலமுமாய் விளங்குகின்றார்கள். புனிதர்களின் கரம்பிடித்து விண்ணகம் நோக்கி பயணிக்க புனிதர்கள் செயின்ட்ஸ் சேனலோடு எப்போதும் இணைந்திருங்கள்