தமிழ் உலகின் மூத்த மொழி. உடலின் உயிர் மொழி. வாசித்தல், எழுதுதல், கேட்டல் என அனைத்து வகையிலும் தமிழ் ஒருவருக்கு எண்வகை உணர்ச்சிகளையும் தூண்டும்.
அத்தகைய சிறப்பு மிக்க இம்மொழியில் தோன்றியுள்ள இலக்கியங்கள் ஏராளம் . அதன் பெருமை உணர்ந்தோர், வாசிப்பாளர்கள் குறைவு. ஆகையால் அவ்விலக்கியங்களை எளிதில் அறியும் நோக்கில் செல்வதே இவ்வலையொளியின் நோக்கம்.