இயேசு அழைக்கிறார் ஜெப வீடு {அக்கினி ஊழியங்கள்} விசுவாச பிரமாணம்:
யா யெகோவா ஏலோயிம் நாமத்தினாலும், எட் யெகோவா ஏலோயிம் நாமத்தினாலும், ரூவாக் யெகோவா ஏலோயிம் நாமத்தினாலும், திரியேக தேவனால் உங்களுக்கு கிருபையும் இரக்கமும் உண்டாவதாக. உலகம் உண்டாவதற்கு முன்னதாக இருக்கிற இயேசு கிறிஸ்து ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவருமான கால சுழற்சிக்கு முன்னதாக தமது ஒளியால் பிரதிபலித்தார்.
மனிதன் பாவம் செய்த பின் அதை நிவர்த்தி செய்ய பிதாவாகிய தேவன் மனிதனின் மேல் வைத்த பேரன்பின் நிமித்தம் தமது ஒரே பெயரான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பி மனிதனின் பாவத்தை இயேசு கிறிஸ்து தன் மீது சுமந்து கொண்டு சிலுவையில் அறைந்து மாம்சத்தில் மரித்து பின்பு உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
அதின் பின் பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனை இந்த பூமிக்கு அனுப்பினார் நாம் சகல சத்தியத்திற்குள் வளர வேண்டும் என்பதும் நம்மை மணவாட்டியாக ஆயத்தப்படுத்தவும் இந்த பூமியில் இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார். சதா காலங்களாகவும் ராஜ்ஜியம் செய்கிறார் ஏலோயிம் தேவன் அவரோடே கூட நானும் இணைந்து இருப்பேன்.