எங்கள் குல தெய்வம் உடையாளூர் ஸ்ரீ செல்வமாகாளியம்மன் யார் என தேட தொடங்கிய பயணம், ஆன்மீக திசையை நோக்கி திரும்பிய தருணத்தில் உருவான நீள் பாதை. வேரை தேடிய விழுதின் பயணத்தில் உருவான விதை. புராணங்கள் , இலக்கியங்கள் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து குறிப்பு எடுத்து கோர்க்கப்பட்ட ஆன்மீக மாலை .காளி அவதாரங்கள் , அம்மனின் வடிவங்கள் , கரு முதல் திரு வரை ஆலயங்கள் மற்றும் பதிகங்கள் , ஆகம விதிகள் மற்றும் பல ஆழமான ஆன்மீக கருத்துக்களை எளிய தமிழில் சுருக்கமாக வழங்கும் தளம் .