கிராமியதெருக்கூத்து:
"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே” —(கூத்தநூல் - தோற்றுவாய்)
(இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின)
இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று. கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியைப் பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களைக் கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். தெருக்கூத்து தொடர்பான வீடியோக்கள் இந்த சேனலில் காணலாம்.