MENU

Fun & Interesting

தமிழாசிரியை

தமிழாசிரியை

அன்புடையீர் வணக்கம்,
ஆழிசூழ் நிலவுலகை ஆளும் அன்னைமொழியைக் கற்கத் துடிக்கும் அன்பு நெஞ்சங்களில் தமிழ்த் தேனைப் பாய்ச்சும் என் சிறிய முயற்சி இது.
முதுகலை மற்றும் இளங்கலை தமிழாசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆயத்தமாகும் எனது அன்பு உடன்பிறப்புகளை தமிழ்வழி ஆற்றுப்படுத்தும் நோக்கமே முதன்மையானது.
போட்டித் தேர்வுகளில் தமிழ் படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ள வழிகாட்டும் வாய்ப்பு இது.
தமிழ்க்கடலை முழுதும் முகர்ந்துக் களித்திடத் துடிக்கும் சிட்டுக்குருவியின் பேராசை ஒத்ததே எனது இப்பணி.
முழுவதும் குடிக்க இயலாவிட்டாலும் நான் பருகிய சிறு துளிகளை உங்கள் முன் தெறிக்க வந்துள்ளேன் தெளிவும், பயனும் பெற்றீர்கள் என்றால் அதுவே நான் பெற்ற பயனாகும்.
அன்புடன்,
தமிழாசிரியை.