https://youtu.be/YM_aUrZBWhU
வாகீஸ்வரியின், "மெல்லிசையே நீயடி" RJ ஸ்வீட் சுந்தரியின் குரலில்...
மெல்லிசையே நீயடி டீசர்:
உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கத்தான் கடத்தினோம் அண்ணி. அவசரப்பட்டு தப்பா நினைக்காதீங்க எங்களை” முருகு அவளை சமாதானம் செய்ய முயல.
“அடப் போங்கடா. நல்லா கொடுத்தீங்கடா வாழ்க்கையை” அசதியில் பசித்துத் தொலைக்க அவர்களிடம் கேட்கவும் தன்மானம் தடுத்து வைத்தது அவளை. அருகில் அமர்ந்திருப்பவன் பார்க்க ஆண்மையாய் கம்பீரமாய் அழகாவும் இருந்து வைத்ததில் கவுரவம் பார்த்தாள் கொஞ்சமாய்.
அதுவும் அவன் அவள் புறம் திரும்பி அமர்ந்து அவளையே வெறித்து வெறித்துப் பார்க்க, பயத்தில் வியர்த்தது அவளுக்கு, ‘நாய் எலும்புத் துண்டை பார்க்குற மாதிரியே பீல் ஆகுதே எனக்கு’ கைகள் நடுங்கியது லேசாய்.
அவள் மனதில் கண்ட கண்ட யோசனைகள் உற்பத்தி ஆக, பயத்தில் ஜன்னல் புறம் திரும்பி அமர்ந்தாள்.
“அண்ணி தேவையில்லாமல் பதட்டமாகாதீங்க. உங்களைக் கல்யாணம் பண்ணி வாழ்க்கை தர ஒரு நல்லவர் காத்திருக்கார். உங்களுக்கான எதிர்காலம் பிரைட்டா இருக்கு கண்ணு முன்னால” பரிதி அவளுக்கு தைரியம் கொடுத்தான்.
"அது யாருடா நல்லவன்" கேட்டவளுக்கு
அப்பொழுதுதான் அவளுக்கு அத்விக் நியாபகம் வர, அவனுக்காகத்தான் தன்னை தூக்கிட்டு போகிறார்கள் எனத் தவறாய்க் கனித்தவள், “இன்னைக்கு எனக்கு கல்யாணம் இருக்கு. இறக்கி விடுங்க நான் போகணும்” அருகில் இருந்தவனை விட்டுத் தள்ளி அமர்ந்தவள் எச்சரிக்கையாய் சொல்ல.
“கொஞ்சம் பேசாம இருக்கியா இல்லையா?” அவன் குரல் ஓங்கி ஒலிக்க, வாயை மூடினாள் கைகளால். கண்களில் கண்ணீர் வழிய அழுகைக்கு தயார் ஆனாள்.
TO READ IN kINDLE: https://amzn.in/d/iqUTpzT
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#rcnovelsaudio
#lovestorytamil #saramtamilnovels
#vageeswarinovels
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#vageeswari
#vageeswarinovels
#vageeswariaudiobooks