#சிவனணைந்த பெருமாள் கதை
#சிவனணைந்த பெருமாள் வரலாறு
#சிவனணைந்த பெருமாள் வில்லுப்பாட்டு
#சிவனணைந்த பெருமாள் வில்லு பாட்டு
#சிவனணைந்த பெருமாள் வில்லிசை
பிரம்மரிஷி- பொன்னுருகி குழந்தை வேண்டி கடுந்தவம் மேற்கொள்கிறார். இறைவனான சிவபெருமான் 12 ஆண்டுகள் மட்டுமே முனிவருடன் வாழ்ந்துவிட்டு பின் கயிலையில் சிவ பூசை செய்யும் மகனாக பெருமாளை (மகா விஸ்ணு) அனுப்புகிறார்.
12 ஆண்டுகள் நிறைவு பெற்றபின் கடவுள் பூசை செய்ய முனி குமாரனான பிராமணி பாலகன் கயிலை செல்கிறான். கயிலையில் சிவ பூஜை செய்து வாழ்ந்து வருகிறான். கயிலையில் இறைவனான சிவபெருமான் பிராமினியின் பூஜையில் மகிழ்ந்து வருகிறார்.
சிவகணங்களும், தேவர்களும், முனிவர்களும் பொறாமை கொண்டு இந்திரனிலம் முறையிடுகின்றனர். இந்திரன் சேவல் வடிவம் கொண்டு நள்ளிரவில் கூவுகிறான். சேவல் சத்தம் கேட்டு எழுந்து பூஜை செய்ய ஆயத்தமாகிறான் பிராமனி. பின்பு நள்ளிரவு என்பதை உணர்ந்தால் விடியட்டும் என நினைத்து தூங்கி விடுகிறான். ஆதவன் உதித்து விட்டதால், பிராமணி காணாத சிவனார் தமக்குத்தாமே சிவபூஜை செய்து விடுகிறார். பிராமனி கண் விழித்து பார்க்கிறான். சிவ பூஜை செய்ய வருகிறான். சிவபூஜை நடந்து விட்டதை அறிந்து கலக்கமடைகிறான். சிவபெருமான் பிராமனியிடம் சிவபூஜை செய்ய தவறியதால், பூலோகம் செல்லுமாறு கூறுகிறார்.
சிவனை அணைந்து இருந்ததினால் “சிவணனைந்த பெருமாள்” என்றும், பூலோகத்தில் ‘சிவனார்’ என்றும் வரங்கள் பல அளித்து குல தெய்வ வழிபாட்டில் 21 பந்தி தேவதைகளுக்கு அண்ணாவி”யாக அனுப்புகிறார். பல ஸ்தலங்கள் சென்ற பின் சிதம்பரத்தில் தெற்கு வாசலில் இருக்கிறார்.
சிவனணைந்த பெருமாள் வில்லு பாட்டு
panpoli mariammal villu pattu.