MENU

Fun & Interesting

உலகத்தின் முதல் ஹிந்து கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலா? மறைக்கப்படும் காஞ்சிக் கோவிலின் வரலாறு!

Praveen Mohan Tamil 198,349 3 years ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/ Twitter...................... https://twitter.com/P_M_Tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan 00:00 - முன்னுரை 00:55 - மிகப் பெரிய நந்தி சிலை 01:40 - தெப்பக் குளம் 02:12 - மனித முகம் கொண்ட விநாயகர் சிற்பம் 04:31 - லிங்கத்தின் Models 05:35 - கதை சொல்லும் சிவபெருமானின் சிற்பம் 08:37 - சிவன் கோவிலில் விஷ்ணு சிற்பம் 10:50 - விசித்திரமான சிற்பங்கள் 13:33 - கோரை பற்கள் கொண்ட சிவன் சிலைகள் 14:35 - வேற்றுகிரகவாசியின் சிற்பம் 15:46 - ஏழு கன்னிகளின் அம்சங்கள் 17:39 - சிதைந்து போன நந்தி சிலை 18:26 – முடிவுரை Hey guys, இன்னைக்கி நாம காஞ்சிபுரத்துல இருக்குற கைலாசநாதர் கோவிலோட சிறப்பம்சங்கள பத்தி தான் பாக்க போறோம். இது ஒரு பழங்கால கோவில்,archaeologist சொல்ற கணக்குப்படி பார்த்தா, இந்த கோவில 700 A.D ல கட்டியிருக்காங்க. அதாவது கிட்டத்தட்ட 1300 வருஷத்துக்கு முன்னால கட்டியிருக்கனும்.இந்த கோயில் அதவிட ரொம்ப பழசுனு இந்த ஊர் ஜனங்க நம்புறாங்க. இங்க இருக்குற ஜனங்க கிட்ட கேட்டா,இந்த கோவில் தான் ஹிந்து கோவிலோட ORIGIN-னு(ஆரம்பம்-னு),சொல்றாங்க.அது மட்டுமில்லாம உலகத்துலயே மொத மொதல்ல கட்டுன ஹிந்து கோவில் இது தானும் சொல்றாங்க.இந்த கோவில்ல சில அற்புதமான அம்சங்கள் இருக்குது. நாம,இந்த கோவிலுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடியே நம்மளால இத உணர முடியுது. கோயில சுத்தி கட்டியிருக்க செவுருக்கு, அதாவது compound-க்கு வெளிய ரொம்ப பெரிய square மாதிரி இருக்குல்ல, இது என்ன? இது ஒரு பெரிய காளை மாடு,இதுதான் சிவனோட வாகனம் நந்தினு சொல்லுவாங்க. இந்த நந்திய கோவிலோட வாசலுக்கு நேரா,வெளிப்பக்கத்துல வச்சிருக்காங்க.இப்பெல்லாம் இந்து(hindu) கோவிலுக்கு வெளிய நந்திய பாக்குறதுங்கறது ரொம்பவே கஷ்டம். இதுவே,இந்த கோவில் ரொம்ப பழசுனு சொல்றதுக்கு ஒரு அடையாளமா இருக்குது. உலகத்திலேய ஒரே பாறைல செஞ்ச ரொம்ப பெரிய நந்திய உங்களுக்கு காட்டியிருக்கேன், ஞாபகம் இருக்கா? அது Lepakshi-ங்கற பழமையான கோவில்ல இருக்குது, ஆமாங்க, அதையும் கோவில்லுக்கு வெளிய தான் வச்சிருக்காங்க. கோவிலுக்கு தேவைப்படுற தண்ணிய சேமிச்சு வைக்கிறதுக்காக, இத கட்டியிருக்காங்க. அதோட design -அ பாக்குறதுக்கு தலைகீழா இருக்குற ஒரு pyramid மாதிரியே இருக்கு பாருங்க.இன்னைக்கி வேணா இது காலியா இருக்கலாம். ஆனா ஆயிர(1000) வருஷத்துக்கு முன்னால,இது ஒரு குணப்படுத்துற புனிதமான தண்ணி(sacred healing water)கொடுக்கற ஒரு ஆதாரமா தான் இருந்திருக்கு.இப்ப இத பூட்டிட்டாங்க,அதனால நம்மளால இன்னைக்கி உள்ள போக முடியல.ஏனா இத அழிக்கனும்னே நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. கோவில்லுக்கு வெளிய,நெறய அழகான லிங்கங்கள் இருக்கு.அது ஒவ்வொன்னையும் அதுக்கான ஒரு குறிப்பிட்ட chamber-ல வச்சிருக்காங்க. இது ஒரு multifaceted அதாவது நெறயா முகம் இருக்குற லிங்கம்,இந்த லிங்கத்த எப்போ பாத்தாலும் ரொம்ப அருமையா இருக்கும். அப்பறம் கோவிலோட main chamber-ல(பிராதான கருவறைல) இருக்குற லிங்கத்துக்கு மொத்தம் பதினாறு முகம் (16 sides) இருக்குது. இந்த லிங்கதுக்கு பின்னாடி,சிவன், அவரோட மனைவி அப்பறம் ஒரு குழந்தை கூட இருக்குற மாறி ஒரு சிற்பத்தை நீங்க பாக்கலாம்.மகாபலிபுரத்துல இருக்குற கடற்கரை கோவில்ல கூட, இதே மாதிரி ஒரு சிற்பத்த நான் உங்களுக்கு காட்டிருக்கேன் ஞாபகம் இருக்கா? அப்போ கூட நான், சிவனுக்கு விநாயகர் முருகர்னு 2 பசங்க இருக்காங்க, அதுல இந்த குழந்தை யாரா இருக்கும்னு உங்க கிட்ட comment பண்ண சொல்லிருந்தேன். அதுல நிறைய பேர் அந்த question -க்கு, அது முருகர்னு தான் comment பண்ணிருந்தீங்க.ஏனா அந்த சிற்பத்துல இருக்கற குழந்தைக்கு மனுஷ முகம் தான் இருக்கு. நம்ம எல்லாருக்கும் தெரியும், விநாயகருக்கு யானை முகம் தான் இருக்கும்னும் பதில் சொல்லிருந்தீங்க. ஆனா இங்க தான் ஒரு சுவாரஸ்யமான விஷயமே இருக்கு, இந்த ரெண்டு கோயிலையும் பத்தி நீங்க உள்ளூர் ஜனங்க-கிட்ட கேட்டாலே, அவங்க இந்த சிற்பத்துல இருக்குற குழந்தை விநாயகருனு தான் சொல்லுவாங்க. ஏனா பழங்கால books-ல என்ன சொல்லிருக்குனா, விநாயகர் பொறக்கும் போது normal -ஆ ஒரு மனுஷ தலையோட தான் பொறந்தாரு.அப்பறம் அவரோட தலைய இழந்துருவாரு. அதனால தான் யானையோட தலைய அவரோட உடம்புல வச்சிருப்பாங்க. விநாயகர் அவரோட தலைய இழக்குறதுக்கு முன்னாடியே, இந்தக் கோயில கட்டிட்டாங்கன்னு இந்த ஊர் மக்கள் நம்புறாங்க. அதனால தான், விநாயகர், மனுஷ முகத்தோட இருக்குற மாதிரி இந்த கோயில் சிற்பங்கள் இருக்குது. இங்க இருந்து கிட்டத்தட்ட நூத்து அம்பது மைல்(150 miles) தள்ளி, ஆதி விநாயகர்னு இன்னோரு கோவில் இருக்கு.அங்கயும் விநாயகர் மனுஷ முகத்தோட தான் இருப்பாரு,யானையோட முகம் இருக்காது.இந்த கோவிலும் விநாயகர், அவரோட உண்மையான தலைய இழக்குறதுக்கு முன்னாடி கட்டபட்டதா சொல்லுறாங்க. Sorry guys, நான் வேற ஒரு கதைக்குள்ள போய்ட்டேன். இப்போ, இதே மாதிரி நிறைய லிங்கங்கள் இங்க இருக்கு. இங்க ஒரு காலியான குழி இருக்குது, ஒரு காலத்துல இந்த இடத்துல ஒரு லிங்கம் இருந்திருக்கனும்.ஆனா இப்போ அது இல்ல. #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comment