ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan
00:00 - அறிமுகம்
00:11 - பாறைக்குள் வினோத வீடு
06:11 - கருட நாக லிங்கம்
08:43 - மர்ம அறை
09:52 - குகைக்குள் light experiment
13:10 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நான் சந்திரவல்லி குகைக்கு வெளில தான் explore பண்ண போறேன். இங்க இந்த மாறி explain பண்ணாத structures நெறயவே இருக்கு. அத பாக்குறதுக்கே ரொம்ப விசித்திரமா இருக்குல்ல? அது கோயில் தானா? இல்ல வேற எதுவுமா? இயற்கையாவே இருக்கற ரெண்டு பெரிய பாறைங்களுக்கு நடுல அத உருவாக்கிருக்காங்க. ஒரு rough-ஆன triangle-ல மூணு ஜன்னல் இருக்கறத நம்மளால பாக்க முடியுது. வாங்க, பக்கத்துல போய் இன்னும் நல்லா பாக்கலாம். ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல, இப்படி நட்ட நடுவுல எதுக்கு இந்த மாறி ஒரு structure-அ உருவாக்கணும்? தரைல இருந்து இருபது அடி உயரத்துல இருக்கற மாறி அத set பண்ணிருக்காங்க. பாறைக்கு மேல இருக்கற இந்த இடத்த பாருங்க. அத பாக்குறப்ப, கிட்டத்தட்ட அது ஒரு நல்ல roof மாறி இருக்குது. இந்த structure-குள்ள என்ன இருக்குது? மேல ஏறி உள்ள என்ன இருக்குன்னு என்னால பாக்க முடியுதான்னு பாக்குறேன்.
இங்க வித்தியாசமான சிற்பம் இருக்குது. நெறய பேர் அத கவனிக்காம விட்ருவாங்க. அத பாக்குறப்ப ஒரு reptilian வலது பக்கத்த point பண்ற மாறி இருக்குது. ஒரு வேள அது முடிக்காம பாதிலேயே விட்ட சிற்பமா கூட இருக்கலாம். அப்படி இல்லனா, அத வேணும்னே தான் தெளிவா இல்லாத மாறி செதுக்கிருக்காங்க. அப்போ தான் நெறய பேர் அத கவனிக்காம போவாங்க. இந்த பாறைங்களுக்கு நடுல புகுந்து அந்த ஏரியாக்கு போக முயற்சி பண்றேன். ஜனங்க யாரும் இந்த building-க்கு போறதுக்கு பாதைய உருவாக்கல. So இந்த இடத்த யாருக்கும் தெரியாம ரகசியமா மறச்சு வச்சுருந்துருக்கணும். என்னோட கேமரா man-ம், guide-ம் எனக்கு பின்னாடியே நின்னுட்டாங்க. இப்போ நான் இங்க என்ன இருக்குன்னு பாக்க முயற்சி பண்றேன்.
இங்க செங்களால கட்டுன ஒரு structure இருக்கு, இதோட entrance கூட அழகா இருக்குது. இதோட உயரம் நாலு அடிக்கும் கம்மியா தான் இருக்கும். இந்த ஏரியால இருக்கற நெறய வாசல் நாலு அடிய விட கம்மியா தான் இருக்கு. ஒரு வேள அவங்க இத குள்ளமா இருக்கறவங்களுக்காக design பண்ணிருந்துருக்கலாம். ஆனா உள்ள ஒண்ணுமே இல்ல, சில இடங்கள்ல (partsஅ) செங்கல வச்சு கட்டிட்டு, அதுல சுண்ணாம்பு கலவய பூசிருக்காங்க. எனக்கு இதுல ஏறுறதுக்கு கஷ்டமா இருக்கு.
அங்க வலது பக்கத்துல, இன்னொரு வழி இருக்குன்னு நினைக்குறேன், ஆனா அப்படி எதுவும் இல்ல. உங்க கைய வச்சு தான்(ஊணி தான்) இந்த பாறைல ஏறணும், அது ரொம்பவே கஷ்டம். மேலயும் ஒண்ணுமே இல்ல, வெறும் பாறையும், செங்களால கட்டுன ஜன்னலும் மட்டும் தான் இருக்கு. இத கட்டுனதுக்கு பின்னாடி என்ன காரணம் இருந்துருக்கும்? மேல இருந்து பாக்குறப்ப, இது இப்படி தான் தெரியும். இது ரொம்ப உயரமா இருக்கு. ஆனாலும், நான் ஏறுறப்ப எனக்கு அப்படி ஏதும் தோணல. செங்கல வச்சு கட்டுன இந்த சுவத்த நல்லா பூசிருக்காங்க(plaster பண்ணிருக்காங்க). இந்த ஜன்னல எல்லாம் நல்லா arch shape-ல design பண்ணிருக்காங்க.
இது ஒரு கண்காணிப்பு கோபுரமா(watching tower-ஆ) இருந்திருக்குமா? இல்லனா, இத எதுக்காக வச்சுருந்துருப்பாங்க? உங்களால இதுல எழுந்துருச்சு நிக்க கூட முடியாது, ceiling-ஓட உயரம் கம்மியா இருக்கதுனால, நான் எப்படி குனிஞ்சு நிக்குறேன்னு உங்களால பாக்க முடியும். ரெண்டு பக்கம் இருக்கற தரையும் சரிவா தான் இருக்கு. நீங்க இந்த ஜன்னல் வழியா வெளில விழுறதுக்கும் வாய்ப்பு(chances) இருக்கு, அதே மாறி சரிவா இருக்கற இன்னொரு பக்கத்துல, வழுக்கி விழுறதுக்கும் வாய்ப்பு இருக்கு. எதுக்காக இந்த structure-அ பயன்படுத்திருப்பாங்க? இதுல room எதுவுமே இல்ல, practical-ஆ இத எதுக்குமே பயன்படுத்த முடியாது, அவ்ளோ ஏன் உங்களால இதுல நிக்க கூட முடியாது.
இதுல இருந்து கீழ இறங்குறது இன்னும் கஷ்டம், ஏன்னா எதையாவது பிடிச்சுட்டு இறங்கலாம்ன்னு பாத்தா இங்க எதுவுமே இல்ல.
Ok guys, நான் இப்போ இறங்க போறேன். Original-ஆ கண்டிப்பா இதுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்துருக்கணும். ஆனா ஏன் எழுந்துருச்சு (நிம்மிந்து) நிக்க கூட முடியாத அளவுக்கு ceiling-ஓட height-அ அவங்க கம்மியா வச்சுருக்காங்க? ஒரு வேள இது இயற்கையான ஒரு restriction=ஆ இருந்துருக்கும்ன்னு நான் நினைக்குறேன். ஏன்னா ரெண்டு பாறைங்களுக்கு நடுல அவங்களுக்கு இவ்ளோ height (உயரம்) இருந்துருக்கு.
இந்த structure-க்கும், இந்த பெரிய பாறைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு ஜனங்க-லாம் சொல்றாங்க. இங்க இருக்கற ஜனங்க இத கருடநாக லிங்கம்ன்னு சொல்றாங்க. இத பாக்குறதுக்கே ரொம்ப விசித்திரமா இருக்குல்ல? கருடன்னா என்னனு உங்களுக்கே தெரியும். இதுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு உங்களால நல்லாவே புரிஞ்சுக்க முடியும், ஏன்னா இந்த பாறை கருடன் மாறியே இருக்கு. ஆனா ஏன் இத கருட நாக லிங்கம்ன்னு சொல்றாங்க? ‘நாக’ அப்படின்ற வார்த்தை பாம்பையும், லிங்கம் அப்படின்ற வார்த்தை cylinder shape-ல இருக்கற சிவலிங்கத்தையும் குறிக்குது. இதுக்கு பக்கத்துல போறப்ப தான், என்னால இங்க ஒரு twist-அயே பாக்க முடியுது.
இந்த பாறை ரெண்டா split ஆகிருக்குது. Left side-ல உங்களால பாம்ப பாக்க முடியும், அதே மாறி right side-ல natural ஆவே cylinder shape-ல ஒரு லிங்கம் இருக்கறத உங்களால பாக்க முடியும். நெறய சிவன் கோவில்கள்ல பாத்தீங்கன்னா, பாம்பு லிங்கத்த பாதுகாக்குற மாறி இருக்கும். இது ஒரு வித்தியாசமான structure. ஒரு வேள இது இயற்கையாவே உருவானதா கூட இருக்கலாம்.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil