எங்கோ... யாரோ...யாருக்காகவோ... || ஜெயகாந்தன் || பவா செல்லதுரை || கதை கேட்க வாங்க ||
பவா அண்ணன் எங்களோடு தங்கியிருந்த மூன்று நாட்களும் அவரிடமிருந்து ஒரு நூறு கதைகள் ஒரு பேரருவியைப் போல கொட்டிக் கொண்டே இருந்தன அவற்றில் எங்களால் பதிவு செய்ய முடிந்தது ஒரு சில கதைகள் மட்டுமே. அவற்றில் முதல் கதையாக தமிழ் இலக்கிய உலகின் சிம்மம் ஜெயகாந்தன் அவர்களின் "எங்கோ...யாரோ...யாருக்காகவோ..." என்னும் கதையை மிகுந்த குதூகலத்துடன் துவங்கியவர் அதனை முடித்த பொழுது அங்கிருந்த அனைத்து உள்ளங்களும் ஒரு கனத்த மௌனத்தினுள் உறைந்து போயிருந்தோம்...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!