MENU

Fun & Interesting

அதிர்ஷ்டம் தரும் வாஸ்து குதிரை - குதிரை படம் வீட்டில் வைக்கலாமா - Sri Diya Stores

Diya Stores 21,604 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

#diyastore #nithra #Horse #vastu horse
மேலும் விபரங்களுக்கு: ☎ Tamilnadu: 9994476594 & 9597215816
☎ Telangana & Andhra: 9360299668

To buy online at: https://bit.ly/Yt_NkNaveen_3DHorse
7 Horse Running Moon 3D : https://bit.ly/Yt_NkNaveen_Photoframe
Vastu horse : https://bit.ly/Yt_Nk_photoframe
7 Horse Running Sun Mate Finish : https://bit.ly/Yt_NkNaveen_photoframe
7 Horse Running Moon Mate Finish
For More Products: https://diyastore.in/

பொதுவாகவே வாஸ்துவிற்கு குடும்பத்தில் நிம்மதியையும், அதிர்ஷ்டத்தையும் பெற்று தரும் ஆற்றல் உண்டு. அதனால் தான் அண்மை காலங்களில் வாஸ்து பார்த்து வீடு கட்டும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வாஸ்து அதிர்ஷ்டம் தரும் சில பொருட்களை வீட்டில் வைப்பதால், வீட்டில் நிலவும் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அவ்வகையில் ஏழு குதிரைகள் படம் வீட்டில் வைப்பதால் என்னென்ன நன்மைகள் கிட்டும்? எதற்காக ஏழு குதிரைகள் படம் வைக்கின்றனர்? எந்த திசையில் வைக்க வேண்டும்? இது போன்ற கேள்வி பலருக்கு உண்டு.

ஏழு குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பது போல் இருக்கும் படங்களை வாஸ்து தோஷம் நீக்குவதற்காக, வீட்டில் நிம்மதி ஏற்படவும் சுவற்றில் மாட்டி வைக்கின்றனர். ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் வருபவர் யார் தெரியுமா? சூரிய பகவான் தான். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தை கொண்டவர். நம் வாழ்வில் நலமும், வளமும் தரக்கூடியவர். அதனால் இப்படங்கள் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் உண்டாக்க வல்லது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் நிறைய இருக்கின்றனர்.

ஏழு குதிரைகள் படத்தை பொதுவாக கிழக்கு அல்லது தெற்கு திசையை நோக்கியபடி மாட்டி வைக்கலாம். வேறு எந்த திசையும் ஏதுவானதாக இருப்பதில்லை. இந்த படத்தைப் பொருத்தவரை திசையை காட்டிலும் நாம் எப்படி வைக்கிறோம் என்பதில் தான் சூட்சமம் உள்ளது.

வீட்டின் வாசலை நோக்கி கட்டாயம் வைக்கவே கூடாது. இதுவே இப்படத்தின் முதல் விதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு குதிரைகளும் வீட்டை விட்டு வெளியில் செல்வது போல் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் வருவது போல தான் வைக்க வேண்டும். வீட்டின் உள்ளே வாசல் கதவின் மேல் பகுதி சுவற்றில் மாட்டினால் சரியாக இருக்கும்.

இந்த வாஸ்து பொருட்களில் ஏழு குதிரைகள் படம் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும். இதற்கு அருகில் வேறு குதிரைகள் படத்தை நிச்சயம் வைக்கக்கூடாது. எண்ணிக்கை தான் இதற்கு முக்கியம். ஒரு சிலர் இதனுடன் வேறு சில வாஸ்து குதிரைகளும் ஒற்றையில் உள்ளபடி வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயமாகும். அப்படி வைக்கும் பட்சத்தில் ஏழு குதிரைகள் எண்ணிக்கை பாதிக்கப்படும். அதன் ஆற்றலிலும் மாற்றங்கள் உண்டாகும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. படத்தில் இருக்கும் குதிரைகள் அதி வேகமாக ஓடுவது போல் இருக்கக்கூடாது. அப்படி அதிக வேகமாக ஓடும்படி குதிரைகள் அமைந்ததால் அந்தப்படத்தை வியாபாரம் செய்யும் இடங்களிலோ, தொழிற்கூடங்களிலோ, உத்தியோகம் செய்யும் இடங்களிலும் கூட வைத்துக்கொள்ளலாம். அதற்குரிய ஆற்றல்கள் அங்கு நல்ல பலன்களை தரும்.

Follow Us :
FaceBook: https://bit.ly/3dj9fJ1
Youtube: https://bit.ly/3dkoEZF
Twitter: https://bit.ly/37maWBA
Pinterest : https://in.pinterest.com/diyastores

Comment