ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan
00:00 - அறிமுகம்
01:59 - ஜவ்வாது மலை
04:42 - குள்ள மனிதர்களின் குகை
08:28 - மர்மமான ஓட்டைகள்
09:21 - பழங்குடி மக்களின் நம்பிக்கை
11:29 - குள்ளர்களின் 2 வகை
12:36 - அடக்கம் செய்யும் இடமா?
15:33 - குள்ளர்களின் Advanced டெக்னாலஜி
16:31 - பரிணாம வளர்ச்சி
19:28 - குள்ளர்கள் நாகர்களா?
23:54 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம ஒரு வரலாற்று இடத்த பார்க்கப் போகல அதுக்கு பதிலா ஒரு, வரலாற்றுக்கு முந்துன காலத்து இடத்த தான் பார்க்கப் போறோம். ஆமா ரெண்டத்துக்கும் அப்படி என்ன வித்தியாசம்? வரலாற்றுக்கு முந்துன இடம் அப்படின்னா, எந்த ஒரு எழுத்தோ இல்ல, எந்த ஒரு வரலாற்று பதிவுகளோ எந்த form-லயும் இல்லாத ஒரு காலம்னு சொல்லலாம். அப்படின்னா இப்ப நாம குறைஞ்சபட்சம் 5000 வருஷம் பழமையான ஒரு இடத்துக்கு தான் போறோம். வரலாற்றுக்கு முந்துன இடம் எல்லாமே ரொம்ப பழமையானது, அதுமட்டுமில்லாம அதெல்லாம் தேடி கண்டுபிடிக்கறதே ரொம்ப கஷ்டம்.
திருவண்ணாமலை district-ல ஜவ்வாது மலை- ங்குற அடர்ந்த காட்டுக்கு தான் நாம இப்போ போய்ட்டு இருக்கோம். இந்த காட Government தான் பாதுகாத்துட்டு வராங்க. இந்த ஜவ்வாது மலைல பெருசா சொல்லிக்குற மாதிரி எந்த ஒரு வசதியும் இல்ல. நான் என்னோட பயணத்தை start பண்றதுக்கு முன்னாடியே இந்த இடத்த சுத்தியும் எந்த ஒரு, ஹோட்டலோ இல்ல, எந்த ஒரு கடையோ இல்ல, ஆனா இங்க இருக்குற கிராமத்து பொண்ணுங்க நல்ல taste-ஆன சாப்பாட செஞ்சு, ரோட்டோரமா விக்குறாங்க. அதுமட்டுமல்லாம, இங்க இருக்க ஜனங்க ரொம்ப friendly-யாவும் helping mindset-ஓடவும் இருக்குறாங்க. அதுமட்டுமில்லங்க, எப்பவுமே உள்ளூர் கதைகள கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.
ஜவ்வாது மலைக்கு உள்ள நுழையுறப்பவே நம்மளால வித்தியாசத்தை பாக்க முடியுது. வெளியே இருக்க கிராமங்கள்-ல நெறைய பேர் கூட்டமா இருக்கத பார்த்தோம். ஆனா இந்த காட்டுக்குள்ள பெருசா ஜனங்க யாருமே குடியேறுன மாதிரி தெரியல. Reserve forest-க்கு வெளியே எப்படி இருக்குனும், பாதுகாக்கப்பட்ட இடத்துக்கு உள்ள எப்படி இருக்குனும் நம்மளால நல்லா பாக்க முடியுது. இவ்வளவு பெரிய இடத்தை எதுக்காக government பாதுகாக்கனும்? அப்படி நம்ம கிட்ட இருந்து ஏதோ மர்மத்த மறைக்குறாங்களா?
ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அப்பறம் ரோடு முடிஞ்சுடுது. சின்ன சின்ன மண் ரோடு மட்டுந்தான் இருக்குது, அதுல என்னால car-ல போக முடியாது. ஏன்னா அந்த ரோடு ரொம்பவே குறுகலா இருக்கு. அதுனால நான் ஒரு bike-அ கடன் வாங்கி அதுல தான் போறேன். பல மைல் தூரத்துக்கு இந்த ரோட use பண்ணி தான் என்னால அந்த மலைக்கு போக முடியும். இந்த காட்டுல வீடு கட்டி குடியேறதுக்கு யாருக்குமே அனுமதி இல்ல. இந்த காட்டு வளங்களுக்கு மத்தில சில நூறு பழங்குடி ஜனங்க மட்டுந்தான் இங்க வாழ்றாங்க. சும்மா அப்போ அப்போ மட்டும் வர்றவங்களுக்கு இதெல்லாம் பாக்க வெறும் மரம் அப்பறம் மலைங்கறத தவிர வேற ஒன்னும் தெரியாது. அப்படி தான?
Bike-ல நம்மளால இவ்ளோ தூரத்துக்கு மட்டுந்தான் வர முடியும். இதுக்கு மேல போகணும்னா, காட்டு வழியா பல மைல் தூரம் நடக்குறதுக்கு நீங்க தயாரா இருக்கனும். ஜவ்வாது மலை அதோட அசாதாரண மூலிகைக்கு பேர் போனது. நுரையீரல் நோயால கஷ்டப்படுற ஜனங்க இந்த மூலிகை நிரஞ்ச காத்த சுவாசிக்கனும்னே இங்க வருவாங்க. நான் இங்க கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேலயே நடந்துட்டு இருக்கேன். நம்மளோட வரலாற்றுக்கு முந்துன இடம் இங்க ஒரு மலை உச்சில தான் இருக்குது. நான் இங்க ரொம்பவே சரிவா இருக்குற பாறை மேல தான் நடந்துட்டு இருக்கேன். ஒருவேள கவனக்குறைவா ஒரு அடி எடுத்து வச்சா கூட, இங்கிருந்து கீழ விழுந்தா என்னால பொழைக்க முடியாது. அப்படி இருக்கு இந்த இடம்.
ஒருவழியா, மலை உச்சிக்கு போறதுக்கு இன்னும் ஒரு செங்குத்தான பாதைல மட்டுந்தான் ஏறனும். நான் middle-ல இருக்கேன். என்ன சுத்தி நாலு பக்கத்துலயும் காடு மட்டுந்தான் இருக்கு. இந்த பாதைல இருக்குற சரிவோட(slope- ஓட) angle- னால ஏறுறதே ரொம்ப கஷ்டமா இருக்குது. இந்த பாதை அந்த அளவுக்கு செங்குத்தா இருக்குது. தேன் எடுக்கறதுக்காக வந்த பழங்குடி ஜனங்கள தவிர கடந்த ஆறு மாசத்துல இந்த இடத்துக்கு வேற யாருமே வந்தது இல்ல. ஆனா மேல இருக்கறத பார்த்தா, அவ்ளோக்கு செம்மயா இருக்குது.
மேல, மலை உச்சில நூத்துக்கணக்குல விசித்திரமான கல்ல வச்சு செஞ்ச ஏதோ structures சிதறிக் கிடக்குது. இந்த கல் எல்லாமே ரொம்ப பளிச்சினு வெள்ளை கலர்ல இருக்குது. நான் முதல்ல பாத்தத நிறைய சின்ன சின்ன கல்ல வச்சி கட்டிருக்காங்க. இந்த குகை மாதிரி structure-அ கட்டறதுக்கு நிறைய கல்லுங்கள பயன்படுத்திருக்காங்க. இத பாக்குறதுக்கு குள்ளர்கள் இல்லனா, குட்டியான மக்களுக்காக ஒரு குகை இருந்தா, எப்படி இருக்குமோ அப்படி இருக்குது. இதனாலயே இந்த இடத்த குள்ளர் caves-னு சொல்றாங்க. இந்த குகைக்குள்ள எதுவுமே இல்ல, அதுமட்டுமில்லாம எந்த ஒரு தடயமோ அறிகுறியோ கூட இல்ல.
நான் மலை உச்சிய explore பண்ணப்போ, இன்னொரு விதமான structure-அ பாத்தேன். நாம ஏற்கனவே பாத்த சின்ன சின்ன கல்ல வச்சி கட்டுன மாதிரி இல்லாம, பெரிய பெரிய கல் பலகைய use பண்ணி இத கட்டியிருக்காங்க. அத பாக்குறதுக்கு குட்டி குட்டி கல் குடிசைங்க மாதிரி இருக்குது. ஆனா இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த கல் குடிசைங்க எல்லாமே ரெண்டு அடி உயரம் மட்டுந்தான் இருக்குது. இந்த கல் குடிசைக்குள்ள மனுஷங்க போறதுங்கறதே கிட்டத்தட்ட முடியாத ஒன்னு. Archeologists இந்த structures-அ ‘dolmens’-னு சொல்றாங்க.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil