புதிய சிலுவைப் பாதை பாடல்: என் பாவ கடனை சிலுவையில் தீர்த்தவா: சகோ.அமல உதயம்,க.ச.,& விவால்டினி மதினன்
Lyrics&Tune:Fr. S. Amala Udhayam
Singer. : Vivaldini Mathinan
Creative Head: Mr. Mathinan
Music. : Mr. Rajesh Hani
Mixing& Mastering:Mr. Rajesh Hani
Studio. : Ashish Heaven
Recording. : Mr. Chandran
Video Editing : Mrs. Shobha Dilip
என் பாவ கடனை சிலுவையில் தீர்த்தவா
என் மீது இரங்கி என் பாவம் கழுவி
என்னை ஏற்றுக் கொள்ளும்..
1.நாவினால் நான் செய்த பாவம் அன்றோ
அநியாய சாவுக்கு தீர்ப்பிட்டது..
2.பிறர் சுமை பகிராத பாவம் அன்றோ உம் மீது சிலுவையை சுமத்தியது...
3.கண்களால் நான் செய்த பாவம் அன்றோ முதல் முறை உமை மண்ணில் வீழ்த்தியது.
4.உளம் நொந்து அழுவோரை தேற்றாதது உம் தாயை பரிதவித்திட செய்ததோ..
5.சீமோனை போல் நானும் மாறிடுவேன் உதவிடும் வாய்ப்புகள் புறக்கணியேன்
6.வாய் மூடி தீமைகள் சகிக்கையிலே வெரோனிகா போல் வாழ தவறுகின்றேன்.
7.பிறர் வீழ தடைக்கல்லாய் நான் வாழ்ந்தது உமை மீண்டும் மண்ணில் வீழ்த்தியதோ
8.தன் துன்பம் பாராமல் பிறர் வேதனை துடைக்கின்ற உம்மிதயம் எனதாகனும்
9.மனத்துயர் இல்லாமல் பாவங்களை மீண்டும் புரிகையில் உமை வீழ்த்தினேன்
10.சிற்றின்ப மோக பாவத்தினால் உம் ஆடை பறிபோக துணை நின்றேனோ
11. அதிகார போதையில் நான் வாழ்வது ஆணியாய் உமதுடல் துளைத்திடுதோ
12. சாவான பாவத்தின் சாபங்களை கழுவிட சிலுவையில் பலியாகின்றீர்
13. மரணத்தின் தருணத்தில் உம் அன்பு தாய் என் தாயாய் மாறிட தயை புரியும்.
14. தாழ்ச்சியாய் என் பாவம் அறிக்கையிட்டு உயிர்ப்பின் மகிமையில் நிறைவு கொள்வேன்..