இயேசப்பா வலிக்குதா- மழலை குரலில் புதிய சிலுவைப் பாதை பாடல்-Fr. அமல உதயம்,க.ச.,- Vivaldini Mathinan
Lyrics and Tune: Fr.. S. Amala Udhayam, OFM Cap.,
Singer. : Vivaldini Mathinan
Music & Mixing. : Rajesh Hani
Mastering. : Rajesh Hani
Creative Head. : Mathinan
Recording. : Ashis Heaven Studio, Tuticorin
Video Editing. : Shobha
இயேசப்பா வலிக்குதா சிலுவை பாரம் அழுத்துதா என்னால தான நீங்க அவமானப்பட்டீங்க
என்னால தான நீங்க கல்வாரி போனீங்க
1.
குற்றம் செஞ்ச பலரும் வெளிய ஜாலியாக சுத்தயில நன்மை செஞ்ச உங்கள போயி சாகடிக்க பாக்கிறாங்க
2.
என்னோட ஆசைகளால்
நான் சேத்த பாவத்த தோள் மேல சுமத்துறாங்க பாரமான சிலுவையா
3.
என்னோட கண்களாலே நான் செஞ்ச பாவத்தால் தடுக்கி விழுகுறீங்க முதல் முறையா மண்ணில
4.
துயரத்தில் கை நழுவா அன்பு தாயின் அன்பு தான்
துணை நிற்கும் அன்னை மரி உலகத்துக்கு சொல்லுறாங்க
5.
தேவையில் இருப்போரை அறிஞ்சி சேவை செஞ்சிடும் சீமோன் மனசு வேணும் இரங்கி நன்மை செஞ்சிட
6.
வேடிக்கை பாத்து நிக்கும் கோழையர்கள் நடுவுலே வீரமாய் உதவ வரும் வெரோனிகாவா மாறுவோம்
7.
வாழ்வு தந்த பெற்றோரை புறக்கணிக்கும் போதிலே உம்மைத் தள்ளுறேனே மறுபடியும் மண்ணிலே
8.
தியாகத்தின் முழு உருவாம் பெண்கள் வாழ்வு உயர்ந்திட எப்பவும் துணை நிற்போம் ஊக்கம் தரும் இயேசுவப் போல்
9
நம்ப வச்சு கெடுக்கையில சூழ்ச்சி செஞ்சு வீழ்த்தையில
இயேசுவை வீழ்த்துறேன் மூணாம் முறை மண்ணிலே
10.
நாகரீகம் என்னும் பேரில் அரைகுறையாய் அணிகயில் நானும் உறிகின்றேனே இயேசு அணிந்த உடைகளை
11.
வசதிகள் வாய்ப்பிருந்தும் கண்ண மூடி போகயிலே இயேசுவை அறைகின்றேனே கூர்மையான ஆணியால்
12.
நண்பனுக்காய் தன் உயிர இழப்பது தான் உண்ம அன்பு உயர்ந்து நிக்கிறாரே இயேசு இங்கு தன்ன தந்து
13.
ஓடோடி நன்ம செஞ்சு உயிர தந்த தன்மகன் உடல சுமக்கிறாரே தாய் மரி தன் மடியில
14.
வெதச்சவன் மறந்தாலும் வெதைகள் முளைக்க மறுக்குமோ நம்பிக்கை தருகிறதே இயேசு உறங்கும் கல்லற