ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan
Hey guys! இந்தோனேசியா ல தொலைவில இருக்கிற ஒரு கிராமத்துல, மர்மமான பழங்காலத்து கோவில் ஒண்ணு இருக்கு. இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி, நிறைய மதில் சுவர்களையும் பல வேற வேற சன்னிதிகளையும் உள்ளடக்கின இது, ஒரு பிரம்மாண்டமான கோவில் வளாகம். நிறைய நிறைய வினோதமான விஷயங்கள் எல்லாம் இங்க இருக்கு. இந்த கோவில் மண்ணுக்கு அடியில ரொம்ப காலமா புதைஞ்சு கெடந்துது. முழுசா தோண்டி எடுத்து அதை சீரமைச்சதுக்கு அப்புறம், அதுக்கு ரெண்டு அடுக்குல பாதுகாப்பு மதில் சுவர்கள் இருக்கிறத நீங்க பாக்கலாம். ஒரு காலத்துல, இந்த பகுதி தண்ணியால ரொம்பி இருந்து ஒரு அகழி போல செயல்பட்டு இருக்கலாம். அதுவும் இல்லாம, இன்னொரு விஷயத்தயும் கவனிங்க. நடுவுல இருக்கிற கருவறைய நெருங்க நெருங்க மெதுவா உயரம் அதிகமாகிக்கிட்டே போறத கவனிங்க.
ஆனா ஏதோ ஒண்ணு, இந்த கோவிலோட அமைப்புல ரொம்ப வித்தியாசமா இருக்கு. இப்படி ஒரு வடிவமைப்பு இருக்கவே கூடாது. இந்த கோவிலோட அமைப்புல என்ன தப்பு இருக்குன்னு உங்களால சொல்ல முடியுதா? கோவிலுக்கு உள்ள நுழையுற வழி வேணும்னே twist பண்ணப்பட்டிருக்கு. நான் என்ன சொல்றேன்னா, பெரும்பாலான இந்து கோவில் வளாகங்கள்ல இந்த நுழைவாசல் வழியா தான் நீங்க உள்ள நுழைவீங்க. அப்புறம் நேரா பிரதான கோவிலோட வாசல நோக்கி போவீங்க. ஆனா இந்த கோவில் வளாகத்தில பாருங்களேன்! பிரதான கோவிலுக்கு ஒரு நுழைவாசல் இருக்கு. ஆனா நடுவுல ஒரு தடை, பாருங்க! இன்னொரு கட்டடம். இந்த பக்கம் ஒரு உறுதியான சுவத்த நீங்க பாக்கலாம். இது புதுசா கட்டப்பட்ட அமைப்புன்னு கூட நீங்க நினைக்கலாம். அப்படின்னாலுமே, அது, பிரதான கோவில் வாசல் மதில் சுவத்தில இருக்கிற நுழை வாசலோட ஒரே நேர் கோட்டுல சீரா align ஆகல பாருங்க! So, நீங்க முதல்ல இந்த entrance வழியா உள்ள நுழைஞ்சு நடக்கணும்: அப்புறம் வலது பக்கமா நகர்ந்து, இந்த கட்டிடத்த சுத்தி போயி, மறுபடியும் இடது பக்கம் திரும்பி நடந்து தான், main கருவறைக்குள்ள நுழைய வேண்டி இருக்கும். இந்தோனேசியாவோட mainstream சரித்திர புஸ்தகங்கள நீங்க படிச்சீங்கன்னா கிடைக்கிற typical விளக்கம் என்னன்னா, இது ஒரு ராஜாவால கட்டப்பட்டது, அவரு யான மேல ஏறிக்கிட்டு இந்த கோவிலுக்கு வந்து போவாரு, அப்படிங்கறது மட்டும் தான்.
அந்த ராஜா யான மேலே ஏறிக்கிட்டு ஆர்ப்பாட்டமா கோவிலுக்குள்ள நுழையறத கொஞ்சம் நீங்க கற்பனை பண்ணிப் பாருங்களேன்! அவரு முதல்ல இப்படி வரணும், வந்து இப்படி திரும்பி இங்க வளையனும். மறுபடியும் இன்னொரு தடவ வளஞ்சு போயி, அப்புறம் main சன்னிதிக்குள்ள போகணும். இது, ஏதாவது உருப்படியான அர்த்தத்தோடு தான் இருக்கா! ஆனா, ஏன் பழங்கால ஸ்தபதிகள் இப்படி தனிப்பட்ட மாதிரி ஒரு கட்டமைப்ப செய்யணும்? ஏன் அவங்க நடுவுல ஒரு பிரம்மாண்டமான ஒத்த கோவில கட்டிட்டு, அதுக்கு நேர் முன்னாடி ஒரே மாதிரி மூணு குட்டி குட்டி சந்நிதிகள கட்டி வைக்கணும்? இந்த மூணு சின்ன கட்டிடங்கள் கட்டினதுக்கான நோக்கம் என்னவா இருக்கும்?
நிறைய, விளக்க முடியாத, வினோதமான, கல்லால் ஆன structures களயும் Archeologists இங்க தோண்டி எடுத்து இருக்காங்க. இங்க ஒரு ராட்சச cylinder அ நீங்க பார்க்கலாம். இது ரொம்ப வழவழப்பாவும், பளபளன்னும் இருக்கு. ஒரு நீர்மூழ்கி கப்பலோட உருவ அமைப்பு போல இருக்கு. என்ன அது? ஏதாவது வினோதமான நோக்கத்துக்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒண்ணா? இல்ல, அது ஒரு லிங்கமா? பக்கத்திலேயே இன்னொரு வினோதமா தெரியற structure. இதுவும் ஒரு cylinder தான். ஆனா, ஒரு பெரிய வாழப்பழத்தப் போல வளஞ்சு இருக்கு. ஆனா, அதோட மேல் பகுதியில விசித்திரமா, ஏதோ ஒரு கைப்பிடி போல இருக்கிற ஒரு structure attach ஆயிருக்கு. ஏன் அவங்களுக்கு இந்த ஏரியால மண்ணுக்கு அடியில புதைஞ்சு கிடந்த இவ்வளவு நிறைய, விளக்க முடியாத, structures எல்லாம் கிடைச்சிருக்கு?!
இப்ப இந்த வெடிகுண்டோட வரிசை போல இருக்கிற கல் structures அ பாருங்க. இத பார்த்தா உங்களுக்கு வெடிகுண்டோட ஞாபகம் வரல? ஏன் அந்த கல்லுங்கள எல்லாம் யுத்த தடவாளங்கள மாதிரியும் வெடிகுண்டுகள மாதிரியும் shape பண்ணி வச்சிருக்காங்க? இந்த கல் structures க்குள்ள வெடி மருந்துப்பொருட்கள அடச்சு வச்சிருந்தாங்களா? Of course, இந்த idea முழு முட்டாள் தனமா தான் இருக்கு, ஒத்துக்குறேன். ஒரு ஒத்த கல் பாளத்துக்குள்ள எப்படி வெடி மருந்த அடச்சு ரொப்ப முடியும்? ஒவ்வொண்ணும் கெட்டியான கல்பாளத்தால ஆனதா இல்ல இருக்கு?!! சரியா?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples #indonesia