#kuruvithurai #gurubhagavan #sholavandan #perumaltemplesintamilnadu #gptamilvlogz #ChithiraRathaVallabhaPerumalThirukovil
மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறை என்ற இடத்தில் அமைந்துள்ளது குரு பகவானின் சிறப்பு பெற்ற தலம் அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில். குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்ட இடம் என்பதால், இந்த இடம் குருவி(ன்) துறை எனப்படுகிறது. குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார். குருவின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.
கோயில் திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரை
மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும்.
Google Map Link:
https://maps.app.goo.gl/64nNA6bz93bTDzar9