நிறைய நபர்களுக்கு இன்று வயிறு உப்பிசம், பசியின்மை, சாப்பிட்டவுடன் வயிறு உப்பிசம், அஜீரண குறைபாடுகள் உள்ளது. இவற்றிற்கு நம்மிடமே தீர்வு உள்ளது. அதுதான் முத்திரையாகும். மன அழுத்தத்தினாலும் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
முத்திரைகள்:
சின் முத்திரை
அபான முத்திரை
அபான வாயு முத்திரை
வாயு முத்திரை
மேற்குறிப்பிட்ட முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். உணவில் ஒழுக்கம், அதாவது மைதாவினால் ஆன உணவு வேண்டாம். அதிக காரம், உப்பு, புளிப்பு வேண்டாம். மாதம் ஒருமுறை வெப்ப இலை கொழுந்து சாப்பிடுங்கள். சீரகம் தண்ணீரில் போட்டு சூடு ஏற்றி தண்ணீர் சாப்பிடுங்கள்.
நம் உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள பிராண சக்தி முத்திரையின் மூலம் வயிற்று உள் உறுப்புகளுக்கு சக்தி கொண்டது சிறப்பாக இயங்கச் செய்யும்.