MENU

Fun & Interesting

ப்பா..! இது வரைக்கும் இப்படி ஒரு விஷயத்த நீங்க கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீங்க..! | பிரவீன் மோகன்

Praveen Mohan Tamil 1,039,147 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohan...
Instagram................ https://www.instagram.com/praveenmoha...
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - மாய மோஹினி?
02:45 - கண்ணப்பரின் கண் தானம்
05:00 - கடல் உயிரினங்களை ஆராய்ந்த முன்னோர்கள்
07:09 - இன்கர்களின் குறியீடு
07:57 - தெப்பக்குளத்தின் வரைபடமா?
09:23 - அழகிய மயிலின் சிற்பம்
10:46 - மன்மதன் - ரதியின் சிற்பம்
13:12 - விசித்திரமான உயிரினம்
14:20 - ஆக்ரோஷமான யானை
15:12 - யானையை வளத்தாங்களா?
16:50 - கடவுள்கள் பூமிக்கு வந்தார்களா?
17:42 - முடிவுரை

Hey guys, நான் இன்னைக்கு புதுக்கோட்டை district-ல, திருமயம் அப்படின்ற கோவில்ல இருக்கற சில புரியாத (விளக்கவே முடியாத) சிற்பங்கள தான் உங்களுக்கு காட்ட போறேன். இது ஒரு அழகான பொண்ணோட சிற்பம். இந்த சிற்பம் எவ்ளோ பெருசா இருக்குன்னு கொஞ்சம் பாருங்களேன். இந்த பொண்ணு யாருன்னு experts-ஆல கூட explain பண்ண முடியல. இவங்ககிட்ட நெறய விசித்திரமான அம்சங்கள் (features) இருக்கு. இவங்க உடம்புல exact-ஆ நடுவுல ஒரு line இருக்கு. அத அவங்க skin-க்கு மேல கொஞ்சம் புடைச்சுட்டு இருக்குற மாறி எப்படி காமிச்சுருக்காங்க பாருங்க. இன்னைக்கு இத தான் டாக்டர்ஸ் எல்லாரும் traditional thoracic incision அப்படின்னு சொல்றாங்க. Surgery பண்றப்ப ஒருத்தங்க உடம்புல கீறுறத தான் Thoracic incision அப்படின்னு சொல்லுவாங்க. (Own words)

ஒரு surgeon இல்லனா டாக்டர், patient-ஓட chest-ல operate பண்ண போறாருன்னா, வழக்கமா இப்படித்தான் cut பண்ணி surgery-அ start பண்ணுவாரு. Surgery பண்ணி முடிச்சு ஒன்னு ரெண்டு மாசத்துல அந்த காயமெல்லாம் ஆறுனதுக்கு அப்பறம் அந்த தழும்ப பாக்குறதுக்கு exact-ஆ இப்படி தான் இருக்கும். ஆனா 9th century-ல கட்டுன ஒரு கோவில்ல இந்த detail-அ எப்படி செதுக்க முடிஞ்சது? ஆயிரத்தி இரநூறு (1200) வருஷத்துக்கு முன்னாடியே இந்த பொண்ணு surgery பண்ணிருந்துருப்பாங்களா? ஒரு வேள அப்படி பண்ணிருந்தா இது என்ன மாதிரியான surgery-ஆ இருந்துருக்கும்?

இங்க அவங்க dress-ஓட ஒரு piece-அ நல்லா கவனமா பாருங்க, இங்க அது அவங்க இடுப்புல இருந்து வெளில வந்துருக்கு. அப்பறம் இங்க, அவங்க இடுப்புல போட்டுருக்கற 1st belt-க்கு மேல போகுது, இங்க அது அந்த belt-க்கு மேல போகுது, அதுக்கப்பறம் அது இங்க இப்படி வெளில வந்துருக்கு. உண்மையிலேயே இதுல மேல கீழன்னு எதுவும் இல்ல, இது just ஒரு கல்லு தான், இதெல்லாமே நம்மளோட illusion (கற்பனை/மாயை) தான். ஒரு வேள இது தான் இந்த சிலையோட key-ஆ (திறவுகோலா) இருக்கலாம். இது மாயையோட கடவுள் மோஹினியா கூட இருக்கலாம். இந்த சக்திய நம்மளால புரிஞ்சுக்க முடியாது, உணர தான் முடியும். இவங்கள ரொம்ப பெருசா காமிச்சுருக்காங்க. பாருங்க, அங்க ரெண்டு மனுஷங்க கூட இருக்காங்க, ஆனா இவங்கள compare பண்றப்ப அந்த மனுஷங்க ரொம்ப சின்னதா தான் தெரியுறாங்க.

இங்க ஒருத்தர் அவங்களோட கைக்கு பக்கத்துல இருக்காரு, அவங்களோட அழக பாத்து அப்படியே ஷாக் ஆகி போய் நிக்குறாரு. இதனால தான் அவரோட ரெண்டு கையவும் எடுத்து கன்னத்துல வச்சுட்டு இருக்காரு, இதுல இருந்தே அவரு surprise ஆகுறாரு அப்படின்னு நாம தெளிவா புரிஞ்சுக்கலாம். இதுல இருக்கற இன்னொருத்தர் என்ன பண்ணிட்டு இருக்காரு? இவரு அவங்களோட முடிய ஓரமா ஒதுக்கி விட try பண்றாரு, அப்போ தான இவரும் அவங்களோட அழக பாக்க முடியும். இந்த ஆளும் அவங்களோட அழக (features-அ) பாக்குறதுல ரொம்ப interest-ஆ இருக்காரு.

இந்த பொண்ணுக்கு அடுத்து இன்னொரு பெரிய ஆம்பளையோட சிற்பம் இருக்குது, இதுவும் அந்த பொண்ணோட சிற்பம் மாறியே ரொம்பவே attractive-ஆ (அழகா) இருக்கு. இவரு யாரு? எந்த கல்வெட்டுமே இல்லாம இந்த உருவத்த நாம எப்படி அடையாளம் கண்டுபிடிக்குறது? ஒரு picture-அ நூறு வார்த்தைக்கு சமமா மதிக்கலாம், ஆனா இந்தியால (நம்ம நாட்டுல) இருக்கற ஒவ்வொரு பழங்காலத்து சிற்பத்தயும் லட்சக்கணக்கான pictures-க்கு சமமா மதிக்கலாம். இவரோட கைய பாருங்க, கைல என்ன வச்சுட்டு இருக்காரு? அத பாக்குறதுக்கு கத்தி மாறி இருக்கு, ஆனா அதுல கைப்பிடி (handle-யே) இல்ல பாருங்க. அது ஒரு arrow head (அம்போட முனை), அவரு arrow -ஓட front portion-அ (அம்போட முனைய) பிடிச்சுட்டு இருக்காரு. அவரு ஏன் அப்படி பண்ணிட்டு இருந்தாரு?

அவரோட இன்னொரு கைய பாருங்க, இங்க அவரு எத வச்சுட்டு இருக்காரு? இங்க அவரு, அவரோட கண்ண வச்சுட்டு இருக்காரு. அவரோட ஒரு கண்ண அந்த அம்போட முனைய வச்சு தோண்டி எடுத்து, அவரோட உள்ளங்கைல வச்சுட்டு இருக்காரு. இப்போ அவரு அந்த கண்ண வச்சு என்ன செய்ய போறாரு? அவரோட காலுக்கு கீழ பாருங்க, அங்க ஒரு லிங்கம் இருக்குது, லிங்கம் சிவ பெருமானோட இன்னொரு form-ன்னு நம்ம எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும். இன்னைக்கு யாராவது லிங்கத்த மிதிச்சா ஒரு பெரிய கலவரமே வெடிக்கும், correct ஆ? ஆனா இவரு நெறய வார் (strap) வச்ச செருப்ப போட்டுட்டு, சிவபெருமான எப்படி மிதிச்சுட்டு இருக்காருன்னு பாருங்க. இவரு யாருன்னு தெரியுதா?

இதுக்கான பதில் நம்ம பழங்கால தமிழ் புராணங்கள்ல மறஞ்சுட்டு இருக்குது. இவரு வேற யாரும் இல்ல, கண்ணப்பர் தான். இவரு ஒரு பெரிய சிவ பக்தர்ன்னு நம்ம எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சுருக்கும். அவரு உயிரோட இருக்கப்பவே அவரோட கண்ண எடுத்து சிவ பெருமானுக்கு குடுக்க துணிஞ்சுட்டாரு. இந்த சிற்பத்துல ஏகப்பட்ட விஷயங்கள சொல்லிருக்காங்க, இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு அவங்க நெறய விளக்கம் குடுத்துருக்காங்க. ஆனா இந்த கோவில்ல பெருசா இருக்கற சிற்பங்கள் மட்டும் இல்ல, நெறய விளக்கவே முடியாத (புரியாத) சின்ன சின்ன சிற்பங்கள் கூட இருக்குது.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comment