CRIME NOVEL-சுபாவின் “துப்பாக்கி நாட்கள்”(தமிழ் கிரைம் நாவல்)
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேகியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்குமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.
“கலைவாணி !இவர்”-
..தெரியும். நரேந்திரரன். ஈகிள்ஸ் ஐ துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவர். கூட வருவது அவருடைய எஜமானி… கலைவாணி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“ ஆமாம் ஏன் இவ்வளவு லேட்?”
“ கேட்டீங்களே ஒரு கேள்வி வைஜெய்தியக் கண்ணாடி முன்னாலிருந்து எழுப்புவது என்பது விமானத் தாக்குதலை சமாளிப்பதை விட கடினம் .
ஏதோ இந்த ண் நேரத்திற்காவது வந்தோமே…ரிசப்ஷன் எல்லாம் முடிந்து சாத்திய கதவை தட்டி உங்களை எழுப்ப வேண்டி வருமோ என்று நான் பயந்தேன் தெரியுமா?
“நரேன்!” வைஜெயந்தி நெயில் பாலிஷ் அணிந்த தன் இரண்டு விரல்களால் அவனைக் கிள்ளினாள். “கொஞ்சம் டீசண்டாக நடந்து கொள், இல்லை யென்றால் அடுத்த கதையிலும் உன்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.