Upanyasam series conducted by Vedavedanta Vardhini and MO Parthasarathy Iyengar Charities
0:00:00 Introduction by Sri U Ve Dr Venkatakrishnan Swami
0:17:35 First Amsam Upanyasam by Sri U Ve Bharathan Swami
ஸ்ரீவிஷ்ணுபுராணம் அம்சம் 1 உபந்யாச சாரம்
ஸ்ரீ உ. வே பரதன் ஸ்வாமி மங்கள ஸ்லோகங்களோடு தொடங்கி, ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் மஹிமையையும் புராணத்தின் வரலாற்றையும் சாத்வீக புராணங்களின் வைலக்ஷண்யத்தையும், மற்ற ராஜச தாமச புராணங்கள் ஏன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சத்வ விஷயங்கள் இருந்தாலும் பெரும்பாலும் தள்ள தக்கன என்றும், மேலும் இந்த புராணத்தில் பிரபஞ்ச உற்பத்தி பகுதியில் , எப்படி பகவான் பிரஹ்மாவிற்க்கு அந்தர்யாமியாய் இருந்து படைக்கும் தொழில் செய்தமையும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து அழித்தல் தொழில் செய்தமையும், தானே தானான தன்மையில் முதல் அவதாரமான விஷ்ணு அவதாரம் எடுத்தமை பற்றியும், பூதங்களின் பஞ்சீகரணத்தையும், அதற்க்கு முன்னர் ப்ரதானம் எப்படி மஹான் மற்றும் அஹங்காரமாக உருவாகின்றன என்பது பற்றியும் (ஒரு பயறு ஊற வைத்தவுடன் அது பெரிய தன்மை அடைதல் மஹான் தன்மைக்கு உவமையாகவும், அதுவே முளை விடும் போது அது அஹங்கார தன்மைக்கு உவமையாகவும்) கூறி, மேலும் கால ப்ரமாணத்தை தற்க்கால (second) வரை கூறி, விநாடியிலிருந்து பரம் வரை காலம் எவ்வளவு பெரியது ஸ்ருஷ்டி எப்போது நடக்கிறது, சம்ஹாரம் எப்போது நடக்கிறது , அதை சொல்லும் பிரசங்காத் ஸ்ரீவராஹ நாயனார் அவதார வைபவம் சொல்லி, நாராயணன் என்று பெயர் காரணம் சொல்லி, பூமி தேவியினுடைய ஸ்தோத்ரம் அவள் எம்பெருமானை பார்த்து என்னை ஜாலார்ணவத்திலிருந்து எடுக்கவில்லை என்றால் எப்படி மனுஷர்கள் உன்னை ஆராதித்து முக்தி அடைவார்கள், ஆதலால் என்னை உத்தரிபிப்பாய் என்றும் ஸ்தோத்ரங்கள் செய்தமை பற்றியும், பின்னர் தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம ஸ்ருஷ்டி க்ரமத்தையும், எப்படி நான்கு வர்ணங்களும் ஆஸ்ரமங்களும் எம்பெருமானை யஜிக்கைகாவே வந்தவை என்பது பற்றியும், ருத்ர ஸ்ருஷ்டி பற்றியும், ப்ருகு முனிவர்க்கு பிராட்டி அவதரித்தமை பற்றியும், அதில் மைத்ரேயருக்கு சந்தேகம் எழ, அதற்க்கு பரசாரருடைய பதில், மற்றும் எப்படி ஸ்ரீவைஷ்ணவ பூர்வசாரியர்கள் அந்த மகாலகக்ஷ்மியினுடைய அணுத்தவத்தை வியாகியானம் செய்தருளினார்கள் என்பது பற்றியும், அம்ருத மதன வைபவமும், இந்த்ரனுடைய மஹாலக்ஷ்மி ஸ்துதியும், மேலும் த்ருவ மஹாராஜன் சரித்ரம், அதிலும் முக்கியமாக சப்த ரிஷிகள் த்ருவனுக்கு செய்த உபதேசங்கள், திருத்வாதசாக்ஷரி உபதேசம், த்ருவனுடைய (எதையும் எவரையும் ஏன் எம்பெருமானையே கண்டுகொள்ளாத) கடும் தவம், பகவான் பிரத்யக்ஷம் முதலியவை கூறி , வேநன் வழியாக ப்ருது மஹாரராஜர் சரித்ரம், பிரசேதசுக்கள் தவம், அவர்களின் விருத்தி, மேலும் ப்ரஹ்லாத மஹாராஜர் சரித்ரம் அதிலே ஹிரண்யகசிபு வின் ஆராஜகங்கள் கூறி ந்ருஸிம்ஹ அவதாரம் கூறி, இதை மட்டுமே ஓரிரு நாள்கள் தனியாக உபந்யசிக்கலாம் என்றும் கால அநுகுணமாக சுருக்கமாக கூறி, எம்பெருமானுடைய திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் எப்படி பல வித ஞாநம் சக்தி முதலியவைக்களாய் பரவி நிற்பது பற்றியும் மிகவும் விரிவாக உபன்யசித்தார். மேலும் இந்த உபன்யாசத்தை ஏற்பாடு செய்துள்ள உபய சபையார்களுக்கும் நன்றி கூறி அமைந்தார்.