MENU

Fun & Interesting

மண்டபமே மணமணக்கும் செட்டி நாடு குழம்பு மிளகாய்துள் சரியான அளவு விளக்கம்/home made kuzhampu thul

KUTTY BIRYANI STORE 60,644 5 months ago
Video Not Working? Fix It Now

வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக என் வீடியோ சமர்ப்பணம் இந்த வீடியோ அரைக்கும் அளவு. 1. காய்ந்த மிளகாய் 1 கிலோ 2. மல்லி 4 கிலோ 3. கட்டி பெருங்காயம் 150 கிராம் 4. கடலைப்பருப்பு 150 கிராம் 5. துவரம் பருப்பு 150 கிராம் 6. பெருஞ்சீரகம் 150 கிராம் 7. மிளகு 200 கிராம் 8. சீரகம் 200 கிராம் 9. வெந்தியம் 100 கிராம் 10. மஞ்சள் 150 கிராம். ( வாசனை கூடுதலாக வேணும் என்றால் கருவேப்பிலையை நன்றாக காய வைத்து சேர்த்து அரைத்து கொள்ளலாம்) இதே அளவுள்ள பொருட்களில் இன்னும் மனம் வேண்டும் காரம் வேண்டும் என்றால் அதாவது செட்டிநாடு சுவையில் வேண்டும் என்றால் மேலே இருக்கும் அனைத்து மசாலா பொருட்களில் 50 கிராம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக குழம்பு தூள் சேர்த்தாலே நமக்கு அதிக கொழகொழப்பு கிடைக்கும். அந்த மாதிரி இல்லாமல் சரியான அளவு குறைவான குழம்பு தூள் வேண்டுமென்றால் இந்த அளவு அரைத்துக் கொள்ள வேண்டும் . காய்ந்த மிளகாய் 1 கிலோ 2. மல்லி 3 கிலோ 3. கட்டி பெருங்காயம் 150 கிராம் 4. கடலைப்பருப்பு 150 கிராம் 5. துவரம் பருப்பு 150 கிராம் 6. பெருஞ்சீரகம் 150 கிராம் 7. மிளகு 200 கிராம் 8. சீரகம் 200 கிராம் 9. வெந்தியம் 100 கிராம் 10. மஞ்சள் 150 கிராம். *உங்களுக்குத் தேவை என்றால் அதிக வாசனை சுவைகிடைக்க 1/4 கிலோ அளவுக்கு குண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். * காரம் நீங்கள் செய்யும் சமையலைப் பொறுத்து மாறுபட வேண்டும் என்றால் அதாவது சாம்பார் வைக்கும் போது மிதமான காரம் கறி வறுவல் செய்யும்போது அதிக காரம் இப்படி மாற்றி செய்ய வேண்டுமென்றால் காய்ந்த மிளகாய் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும் மீதி மல்லி அந்த மிளகு சீரகம் மசாலா பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் சமையல் செய்யும்போது அந்தத் தனியாக அரைத்த மசாலா சேர்த்து காரத்துக்கு தேவையான தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம் மிகவும் நன்றாக இருக்கும்.. * மழைக்காலத்தில் வெயில் அதிகமா இல்லாத நேரத்தில் வறுத்து அரைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக மிதமான அனல் பக்குவத்தில் வறுத்து அரைக்க வேண்டும் ஒரு பொருள் தீச்சல் வந்தால் கூட உங்களுக்கு அந்த வாசனை குறைந்து விடும் குழம்புத்தூளில் கலரும் குறைந்து விடும். அதிக நாள் கெடாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் கவரில் குழம்புத்தூளை போட்டு கட்டி வைக்க வேண்டும் அதை உபயோகப்படுத்துவதற்கு ஒரே கரண்டி அதே இடத்தில் இருக்க வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக காரமாக வாங்க வேண்டும் சிவகாசி மிளகாய் மிகவும் அருமையாக இருக்கும். ரொம்ப நீளமுள்ள காய்ந்த மிளகாய் வாங்கினீர்கள் என்றால் அரைக்கும் போது திரி திரியாக வரும் குழம்பு நுரை மாதிரி கொதிக்கும். நாட்டு மல்லி என்று கேட்டு வாங்கவும் மல்லி பார்க்கும் போதே கலராகவும் குட்டியாகவும் இருக்கும். அரைக்கும் இடத்தில் அவசரப்படாமல் பொறுமையாக நான் வீடியோவில் காட்டும் செய்முறை மாதிரி அதிக அளவில் அரைத்து வைத்தால் ஆறு மாதத்தில் இருந்து எட்டு மாதம் நன்றாக சுவையாக இருக்கும். குடும்பத்தில் அதிக நபர் இருப்பவர்கள் அதிக குழம்புத்தூள் வேண்டுமென்றே மல்லி அதிகமாக சேர்த்து அரைப்பார்கள். அப்படி அதிகமாக சேர்த்து அரைக்கும் போது அதிக கொழுகொழுப்பு கிடைக்கும் அரை கிலோ குழம்பு மிளகாய் தூள் அளவு வேண்டுமென்றால் நான் சொல்லியிருக்கும் அளவுகளில் பாதி அளவு அரைத்துக் கொள்ள வேண்டும் இந்த வீடியோவை பார்த்து பிடித்து தமிழ்நாட்டு குடும்ப இல்ல தரிசிகள் பார்க்கிறீர்கள் என்றால் என் வீடியோ சேனலில் சாம்பார் பொடி மிகவும் அருமையாக எவ்வளவு அளவு என்ன செய்முறை வீடியோ போட்டு இருக்க கண்டிப்பா பாருங்க 🙏 என் வீடியோ பிடிச்சிருந்தா கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணட்டாலும் பரவால்ல ஷேர் பண்ணுங்க உங்களால் மற்றவர்களுக்கு தெரியவரும் நீங்களும் ஒரு உதவி செய்த மாதிரி இருக்கும் 🙏 நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக கடினமான உழைப்பில் வீடியோ போடுகிறேன் நான் உங்கள் நண்பன் குட்டி🙏 9566797873

Comment