#இயற்கை_பூச்சிவிரட்டி
#பத்திலைக்_கஷாயம்
#_Ullathanaya_Uyarvu
உள்ளதனய உயர்வு ஆர்கானிக்
Panruti-607106
Cell: 9385891905
Email: kgk.kumaravel@gmail.com
எங்களிடம் தரமான #மீன்_அமிலம் , #பஞ்சகாவிய ,#பூச்சி_விரட்டி #,EM_கரைசல் ,#போரான் போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
வேப்ப இலை (ஈர்க்குடன்), புங்க இலை, சீதாபழ இலை, ஆமணக்கு இலை, ஊமத்தை, இலை, மாமர இலை, வில்வ இலை, துளுக்கமல்லி (முழு செடியும்), கிருஷ்ண துளசி, கொய்யா இலை, பப்பாளி இலை, மாதுளை இலை, மஞ்சள் இலை, இஞ்சி இலை, காப்பி இலை, ஆடாதொடா இலை, எருக்கு இலை, அரளி இலை, நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை மடல்
மேற்கண்ட இலைகளை வகைக்கு 2 கிலோ எடுத்துக்கொண்டு சிறியதாக நறுக்கியோ அல்லது இடித்தோ டிரம்மில் சேர்த்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கவும். டிரம்மை சணல் சாக்கை கொண்டு மூடி கட்டி வைக்கவும். தினமும் காலை, மாலை இரு வேளையும் கடிகார சுற்றில் ஒரு நிமிடம் கலக்கி விடவும். 40 நாட்கள் இதை நொதிக்க விடவும். 40 நாட்களுக்கு பின்பு மெல்லிய துணியை வைத்து கரைசலை இரண்டு முறை நன்றாக வடிகட்டிய பின்பு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 400 மி.லி. கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பயன்கள்
அனைத்து வகையான பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தும். பூஞ்சண நோய்களையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும்
பயன்படுத்தும் காலம்
இதை 6 மாதங்கள் வரை நிழலில் வைத்திருந்து பயன்படுத்தலாம்