This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. நேயர்களின் விமர்ஸனங்கள் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளால் இயற்றப்பட்ட ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் அவராலேயே கானமாக வரகூர் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் சன்னிதில் பாடப்பட்டு ஶ்ரீ கிருஷ்ணராலேயே அங்கீகரிக்கப்பட்டதான அமரகாவியம். தக்ஷிண சம்பிரதாய பஜனைகளில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது என்பதை பல பாகவததோத்தமர்கள் அறிந்ததே. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளை ஆத்ம சன்யாசம் எடுக்கச்செய்த்தும் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அவருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி பூபதிராஜபுரம் வரவழித்து வரகூர் வந்தபின் பிணியை தீர்த்து ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்க கீதங்களை கானமாக பாடுவதற்கு ஆக்ஞை அளித்ததும் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அதனை அங்கீகரித்தும் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா. திருக்கல்யாண கீதம் முடிந்த பிறகு அவருக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து ஆத்மாவும் உடலும் வேறு என்பது அல்ல என்பதை மனிதர்களாக பிறந்த நமக்கு உணர்த்தவே ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளை ஜீவனுடன் வைகுண்டம் கூட்டிச்சென்றதும் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா.. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளின் சுய சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நற்கதி அளிக்கவே நம்மைப் பரிக்ஷித்து பிறகு சம்சார சாகரத்திலிருந்து முக்தி அளிப்பார் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். கலியுக ஆரம்பத்தில் மஹாவிஷ்ணுவிடம் கலிபுருஷன் கேட்க தவறிய ஒன்று பகவானின் நாம சங்கீர்த்தனம். அதனை கலியுகத்தில் செய்வதினால் நாம் எளிதாக சம்சார சாகரத்திலிருந்து முக்தியடையலாம். இந்த நாம சங்கீர்த்தனம் பகவானால் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் மூலம் நமக்கு ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் என்ற வடிவில் எளிதாக கிடைத்த பொக்கிஷம். இப்படிப்பட்ட ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் என்ற அமரகாவியத்தினை காலம்சென்ற வரகூர் வாசி ப்ரம்ம ஶ்ரீ குருஸ்வாமி சாஸ்திரிகள் கலியுகம் முற்றிய தருணத்தில் நமது நன்மைக்காகவே எளிதில் அறிந்துகொண்டு நாம சங்கீர்த்தனம் செய்வதற்காகவே தமிழ் மொழியில் விளக்கமளித்து 25 வருடத்திற்கு முன்பு புத்தகமாக வெளியிட்டடது நாம் அறிந்ததே. காலம் பொய்த்து மனிதர்களின் முக்கிய தொழிலான விவசாயம் நலிந்து வரும் காலத்தில் மனிதர்கள் தொழில்நுட்பத்தின் காரணத்தினால் நவீன வசதிகளுக்கு அடிமைப்பட்டு எளிதாக வாழ்க்கை அமைய நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வந்ததால் கிராமங்களும் அங்குள்ள ஆலயங்களும் முக்கியத்துவம் இழக்க தொடங்கின. மேலும் நகரங்களின் வளர்ச்சியால் நவீன கல்வி நுட்பங்கள் மேலும் வளர்ந்து மென்பொருள் வளர்ந்து மனிதர்கள் இளைப்பார நேரம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வரும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. கலியின் பிடியிலிருந்து விடுபட எண்ணி நமது சம்பிரதாயங்கள் அழியாமல் இருக்கவேண்டும் என்றும் மேலும் எளிதான முறையில் நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு ஏதுவாக ஒருசில இளம் வயதினர்களின் விருப்பதற்கிணங்க காலம்சென்ற வரகூர் வாசி ப்ரம்ம ஶ்ரீ குருஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய புத்தகம் மேம்பட வேண்டும் என்பதற்காகவும் ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் அமரகாவியமாகவே இருக்கவும் தற்கால நவீன மேம்பாட்டை மனதில் கொண்டு வரகூர் வாசிகளின் ஒத்துழைப்புடனும் பாகவத சிரோன்மணி திருவையாறு ஶ்ரீ நடராஜ சர்மா @ ப்ரேம்நாத் அவர்களின் சிறந்த வ்யாக்யானங்களுடன் மேலும் பல பாகவதர்கள் மற்றும் ஸங்கீத விதூஷிகளின் பங்கேற்புடன் அனைத்து தரங்க கீதங்களையும் காணொளியாக கட்டமைப்பு செய்து 22 October, 2022 முதல் 04.11.2025 வரை அலமேலு மங்கா சமேத ஶ்ரீ ப்ரன்ன வேங்கடேச பெருமாள் அனுக்கிரகத்துடன் எந்தவித இடையூறுமின்றி வெளியிட்டது ஒரு சாதனையே என்று கருதவேண்டும். இதனை ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு வெளியிட்டுள்ள காணொளிகளை பல பாகவதர்கள், மற்றும் பக்தர்கள் ,கண்டு களித்து பாராட்டியுள்ளனர். அவர்களின் கருத்துக்களை காணொளியாக ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் – வரகூர் வாசிகள் என்ற எங்களது YOUTUBE CHANNELல் 11.01.2025 மற்றம் 18.01.2025 ஆகிய இரண்டு தினங்களில் வெளியிட வாய்ப்பு கிடைத்து, வெளியாக உள்ளது. ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளை பாதுகாத்து உலகளவில் பரப்புவற்கு தற்கால இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவார்கள் என்ற பரி பூரண நம்பிக்கை உள்ளது. . எங்களை ஆதரித்து எங்கள் வீடியோக்களைப் பார்த்து,கேட்டு ரசித்த பக்த மஹாஜனங்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சகல குணங்களும் நிறைந்த ருக்மிணி சத்தியபாமா சகித வடிவில் வீற்றிருக்கும் ,சகல சங்கடங்களையும் போக்கி வேண்டிய வரம் தவறாமல் தருபவரும், ஸர்வ மங்களங்களையும் நல்கும் அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வேங்கடேச பெருமாளை நாம் அனுதினமும் வணங்கி ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் மூலம் நாம சங்கீர்த்தனம் செய்து நமது வாழ்க்கையினை சந்தோஷமாக வாழ்வதற்கு வழி வகுத்துக்கொள்வோமாக! சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து