தங்க ஆனந்தக் களிப்பு - Thanjai Bhuvneswari | Thanga Anandha Kalippu | Devotional Speech-2020
Devotional Speech Regarding Thanga Anandha Kalippu
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுயமான தங்கம் இத்தங்கம் - சிவ
சுப்பிரமணியம் எனும் தெய்வத் தங்கம்
அந்தரர் வேண்டொரு தங்கம் - ஈறில்
அருசிகரக்கிரி நின்றெழு தங்கம்
சுந்தரமாய்ச் சுடர் தங்கம் - உமை
துங்க மலர்க் கரந் தங்கொரு தங்கம் 1
வேதத்திலே உள்ளத் தங்கம் - சுத்த
வித்தை சொல் ஆகம நித்தியத் தங்கம்
நாதத்தின் மேலுள்ளத் தங்கம் - அந்த
நாதம் கடந்தபின் நாம் அடை தங்கம் 2
பார்ப்பவர்க் கின்புசெய் தங்கம் - சிவ
பாக்கியமெலாம் பகுக்கின்ற தங்கம்
சீர் பரதத்துவத் தங்கம் - நிறை
சிற்பர தேஜோமய ஆனந்தத் தங்கம் 3
நினைப்பவர்க் கின்பு செய்த் தங்கம் - தொண்டர்
நெஞ்செனும் பேழையிலே நிறை தங்கம்
வினைப் பவம்வெல் பசுந் தங்கம் - ஞான
விளைவற்ற பூமியில் புதைபட்ட தங்கம் 4
வாதிகட்கு எட்டாத தங்கம் - அன்பு
வறண்டலைவோர் அறியா வருந்தங்கம்
தீதிகற் சூழ்களை தங்கம் - தவச்
செல்வர்க்கு செல்வமதாந் திருத் தங்கம் 5
அஞ்செனத் தெட்டாதத் தங்கம் - பத்தி
யஞ்செனத் தேயெட்டும் அற்புதத் தங்கம்
செஞ்செயத் தைத்தரு தங்கம் - சிவ
சித்தர்கள் யோகிகள் மெச்சிடு தங்கம் 6
மாற்றில் உயர்ந்தொளிர் தங்கம் - எல்லா
மங்கும் படிக்கருள் செய்தனித் தங்கம்
ஆற்றலின் மேம்படு தங்கம் - பகி
ரண்டமெல்லாம் விலை கொண்டுயர் தங்கம் 7
அளவைக் கடங்காத தங்கம் - தினம்
அனலிட் டுருக்கினும் உருகாத தங்கம்
களவுக் கிணங்காத தங்கம் - தன்னைக்
காமுறுவார் மிடிதீர்க்கின்ற தங்கம் 8
யாதனையைத் தெரு தங்கம் - தெய்வ
யானை விழிக்கிதமாய் அவிர் தங்கம்
ஏதனையா நறுந் தங்கம் எழில்
ஏனலினோர் கொடிதான் படர் தங்கம் 9
ஞான விண்ணாகின்ற தங்கம் - நல
நல்குந்திருப்புக ழோன் கண்ட தங்கம்
வானவர் மாமுடித் தங்கம் - நம்மை
வாழ்விக்க வந்த பராபரத் தங்கம் 10
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------