Thiruppugazh SaravaNabavanidhi (thiruvEngkadam) - திருப்புகழ் சரவண பவநிதி (திருவேங்கடம்)
Written By – Saint Arunagirinadhar
Vocals – Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor
Art Direction - Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Aura Branding Solutions. Arunan - 7200306591
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
......... பாடல் .........
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
விளக்கம்
சரவணபவனே, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,
எனவோதித் தமிழினி லுருகிய ... என்று பல முறை தமிழினில்
ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற
அடியவரிடமுறு ... உன் அடியார்களுக்கு உற்ற
சனனமரணமதை யொழிவுற சிவமுற ... பிறப்பு, இறப்பு என்பவை
நீங்கவும், சிவப்பேறு அடையவும்,
தருபிணி து(ள்)ள ... வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,
வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே ... வரத்தினை நீ எங்கள் உயிர்
இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.
கருணைய விழிபொழி ... கண்களினின்றும் பொழிகின்ற கருணையை
உடையவனே,
ஒருதனி முதலென வருகரி திருமுகர் ... ஒப்பற்ற தனிப் பெரும்
தலைவனென வந்த யானைமுகக் கணபதியை
துணைகொளு மிளையவ ... துணையாகக் கொண்ட இளையவனே,
கவிதை யமுதமொழி தருபவர் ... கவிதைகளாகிய அமுத
மொழிகளை வழங்குபவருடைய
உயிர்பெற அருள்நேயா ... உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்
புரியும் நேசம் உடையவனே,
கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் ... கடல் சூழ்ந்த
இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,
கலகம் இனையதுள கழியவும் ... கலக்கங்களும், இன்னும்
இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,
நிலைபெறகதியும் ... நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,
உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே ... உனது திருவடி நிழல்
அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?
திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர ... திரிபுரங்களை
எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே,
சமரபுரி தணிகையு மிகுமுயர் ... திருப்போரூரிலும்,
திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த
சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா ...
சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே,
தினமும் உனது துதி பரவிய அடியவர் ... நாள்தோறும் உன்
புகழைக் கூறும் அடியார்களின்
மனது குடியும் ... உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே,
இரு பொருளிலும் இலகுவ ... அருட்செல்வம், பொருட்செல்வம்
ஆகிய இரண்டிலும் விளங்குபவனே,
திமிர மலமொழிய ... இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு
தினகரன் எனவரு பெருவாழ்வே ... ஞானசூரியனாக வருகின்ற
பெரும் செல்வமே,
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் ... பாம்பணையில்
துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின்
மருகனெனவெ வரும் அதிசயமுடையவ ... மருகோனாக வரும்
அதிசய மூர்த்தியே,
அமலி விமலி பரை ... மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும்,
பெரியவளும் ஆகிய
உமையவள் அருளிய முருகோனே ... உமாதேவி தந்தருளிய
முருகக் கடவுளே,
அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென ... அதலம் விதலம் முதலிய
ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க
வருமயிலினிதொளிர் ... வருகின்ற மயிலின் மீது இனிதாக
ஒளி வீசுபவனே,
ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் ... ஆறுகோணச்
சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற
அரகர சிவசிவ பெருமாளே. ... ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.
Song
saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara ...... enavOdhith
thamizhinil urugiya vadiyavar idamuRu
janana maraNamadhai ozhivuRa sivamuRa
tharupiNi thuLavara memadhuyir sukamuRa ...... aruLvAyE
karuNaiya vizhipozhi oruthani mudhalena
varukari thirumugar thuNaikoLum iLaiyava
kavidhai amudhamozhi tharubavar uyirpeRa ...... aruLnEyA
kadalula ginilvarum uyirpadum avadhigaL
kalagami naiyadhuLa kazhiyavum nilaipeRa
gathiyum unadhu thiruvadi nizhal tharuvadhum ...... orunALE
thiripuram eriseyum iRaiyavar aruLiya
kumara samarapuri thaNigaiyu migumuyar
sivagiriyilum vada malaiyilum ulaviya ...... vadivElA
dhinamum unadhuthudhi paraviya adiyavar
manadhu kudiyumiru poruLilum ilaguva
thimira malamozhiya dhinakaran enavaru ...... peruvAzhvE
aravaNai misaithuyil narahari nediyavar
marugane navevarum adhisayam udaiyava
amalivi maliparai umaiyavaL aruLiya ...... murugOnE
athala vithalamudhal gidugidu giduvena
varumayil inidhoLir shadumaiyil naduvuRa
azhaginudan amarum arahara sivasiva ...... perumALE.