ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan
00:00 – துப்பாக்கியை உபயோகித்த தமிழர்கள்
02:29 – பழங்கால நூல்களில் உள்ள ஆதாரங்கள்
03:38 – அலெக்சாண்டர் வெளியேறிய காரணம்
05:28 – இராவணனின் வெடிகுண்டு
07:52 – பழங்காலத்தில் இருந்த வெடிகுண்டு
09:44 – வெடிமருந்தை தயாரித்த பழங்காலத்தவர்
11:23 – Time Bomb-ஆ கண்டுபிடிச்ச இந்தியர்கள்
12:56 - முடிவுரை
Hey guys, பழங்கால இந்தியால Advanced - ஆன Weapons (ஆயுதங்கள) இருந்ததுக்கான சில solid- ஆன evidence-அ (முக்கியமான ஆதாரங்கள) தான் நான் இன்னைக்கு உங்களுக்கு காட்ட போறேன். ஆமா இங்க நீங்க பாத்துட்டு இருக்குறது துப்பாக்கியோட சிற்பம் தான், இது ஒரு rifle. நீங்க நல்லா கவனமா பாத்தீங்கன்னா, இந்த ஆளு அந்த GUN- அ LOAD பண்ணிட்டு இருக்காருனு உங்களுக்கு தெளிவா தெரியும். பழங்காலத்துல இப்படி தான் Gun- அ Load பண்ணுவாங்க. Barrel வழியா வெடிமருந்த (gun powder-அ) உள்ள போட்டு, ஒரு piper- அ வெச்சி மேல இருந்து குத்துவாங்க, இந்த பழங்கால கோவில்ல இருக்கற சிற்பமும் Exact-ஆ அதேயே தான் பண்ணுது. இப்போ உங்களுக்கு கண்டிப்பா doubt வரும்-ல?
இந்த பழங்கால சிற்பத்துல இருக்குறது, உண்மையிலேயே துப்பாக்கிய தான் காட்டுதா? ஒரு வேல இது வேற ஏதாவதா இருக்கலாம், ஏன்னா பழங்கால இந்தியர்களால துப்பாக்கிய use பண்ண முடியாது, correct -ஆ? ஒரு வேல அது ஈட்டி, இல்லனா, இரும்பு கம்பி, இல்லனா, இந்த மாறி வேற ஏதாவது ஒரு weapon-ஆ (ஆயுதமா) கூட இருக்கலாம். ஆனா வேற ஒரு கோவில்ல இன்னொரு சிற்பம் இருக்கு. இங்க குதிரை மேல உக்காந்துட்டு இருக்கற ஒரு தாடிக்காரர் அவரோட வாள எடுக்க ready -யா இருக்காரு. ஆனா இவருக்கு கீழ பாருங்க, இந்த பையன் என்ன வச்சிட்டு இருக்கான்? அவன் ஒரு துப்பாக்கிய வச்சி குதிரை மேல இருக்குறவர குறி வைக்குறான்னு இங்க நமக்கு தெளிவா தெரியுது. இது ஒரு துப்பாக்கியா இருக்குமோனு உங்களுக்கு Doubt -யே வர கூடாது, ஏன்னா அவனோட கண்ண பாருங்க. அவனோட இடது கண்ண முடிட்டு, வலது கண்ணு வழியா எதிரியோட இதயத்த பாத்து குறி வைக்குறான்.
அவன் bullet -ல சுட்ட உடனே இந்த மனுஷன் செத்துடுவாரு, correct -ஆ? ஆனாலும் அவன modern dress போட்டுருக்கற மாறி காட்டல, அவ்ளோ ஏன் medieval (இடைக்கால) dress போட்ட மாதிரி கூட இங்க காமிக்கல. அவனோட இடுப்புல வெறும் கோமணம் (சின்ன துணி) மட்டும் தான் கட்டிருக்கான். அது மட்டுமில்லாம இவனோட hairstyle -அ பாத்தா, பழங்கால இந்தியர்களோட hairstyle -ஓட அப்படியே ஒத்து போகுது. ஆனா வெறும் 600 வருஷத்துக்கு முன்னாடி தான் Europeans gun-அ கண்டுபிடிச்சிருக்காங்க அப்படின்னா, அப்புறம் ஏன் பழங்காலத்து இந்திய சிற்பங்கள்ல துப்பாக்கிய காட்டிருக்கறத நாம பாக்குறோம்? இந்த சிற்பங்கள்-லாம் உண்மையிலேயே பழமையானது தானா? இத பாருங்க, இது இப்போ ஆந்திரால காக்கிநாடா அப்படின்ற இடத்துல இருக்கற archaeology museum-ல இருக்கு. இது பக்கத்துல எந்த ஒரு official board-ம் இல்ல, ஆனா இது 1000 வருஷம் பழமையானதுனு சொல்றாங்க.
இந்தியால 600 வருஷத்துக்கு முன்னாடியே துப்பாக்கி இருந்திருந்தா, ஏன் எந்த ஒரு பழங்காலத்து இந்திய புத்தகங்களையும் அத பத்தி mention பண்ணல, correct-ஆ? Manusmriti- ன்ற book-ல இருக்கற text -அ படிக்கிறேன், இது சுமார் 2000 வருஷம் பழமையானதுன்னு historians சொல்றாங்க. Chapter 7-ல “மறைக்கப்பட்ட ஆயுதங்கள், முள் அம்புகள், விஷ அம்புகள், இல்லனா நெருப்பால தூண்டப்பட்ட எறிக்கணைகள use பண்ண கூடாது"-ன்னு சொல்லிருக்கு. “நெருப்பால ஆன எறிகணைகள்” அப்படின்னா அது துப்பாக்கி தான் correct-ஆ? அத தவிர வேற என்னவா இருக்க முடியும்? 2000 வருஷம் பழமையான book-ல ஏன் இந்த மாறி எழுதிருக்காங்க? Naisadha Charita-ன்ற இன்னொரு இந்திய புத்தகத்துலயும் துப்பாக்கிய பத்தி பேசிருக்காங்க.
இத 12-வது நூற்றாண்டுல எழுதுனதா Experts- லாம் confirm பண்றாங்க. இந்த book- ஓட author ஒரு பொண்ணோட elevated nostrils-அ ஒரு ஜோடி துப்பாக்கி ஓட compare பண்றாரு. உண்மையிலேயே நெறய பழங்காலத்து இந்திய புத்தகங்கள்ல துப்பாக்கிய தெளிவா mention பண்ணிருக்காங்க, இத சமஸ்கிருதத்துல நாலிகா-னு சொல்லிருக்காங்க. இந்திய துப்பாக்கிய பத்தியும், வெடிமருந்த பத்தியும் Philostratus - ன்ற Greek philosopher ஒரு interesting -ஆன விஷயத்த சொல்லிருக்காரு. இவரு ஆயிரத்தி எண்ணூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவரு. The Great Alexander ஏன் இந்தியால இருந்து திரும்பி போனாரு அப்படின்றதுக்கு complete-ஆ வித்தியாசமான ஒரு Explanation-அ இவரு குடுத்துருக்காரு.
அவரோட வீரர்கள் (soldiers -லாம்) continuous -ஆ போர்ல சண்டை போட்டு tired ஆனதால அவரு திரும்பி போக வேண்டி இருந்துச்சு, அப்படின்றது தான் ஒரு standard- ஆன explanation. ஆனா இந்த Greek writer என்ன சொல்றாருன்னா, இந்த புத்திசாலியான ஜனங்க எல்லாம் Hyphasis அப்பறம் கங்கைக்கு நடுல வாழுறவங்க. Hyphasis அப்படின்னா, Beas ஆறு, அப்பறம் கங்கை அப்படின்றது இப்போ இருக்குற அதே கங்கை ஆறு தான். "இந்த புனிதமான மனுஷங்க-லாம் கடவுளுக்கு பிடிச்சவங்க. இவங்க-லாம் புயல் அப்பறம் சுவத்துல இருந்து வந்த இடிய வச்சு இவங்களோட எதிரிய attack பண்ணாங்க"-ன்னு சொல்றாரு. இன்னொரு இடத்துல இந்தியர்கள் எப்படி அவங்களோட எதிரி படைங்க கூட சண்டை போட்டாங்கன்னு இவரு mention பண்ணிருக்காரு.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil