MENU

Fun & Interesting

இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!

Praveen Mohan Tamil 117,428 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - விசித்திரமான Patterns
00:44 - Lunar Stations ( சந்திர நிலையங்கள் )
02:04 - Advanced Ancient Astronomy
02:57 - பழங்கால தமிழ் கல்வெட்டுகள்
04:09 - விசித்திரமான Details
06:02 - Telescope இல்லாம எப்படி?
09:13 - கோவில்களில் உள்ள ஆதாரங்கள்
10:03 - வினோதமான கடவுள்கள்
10:41 - முடிவுரை

Hey guys! இன்னிக்கு நாம திருப்பெருந்துறைங்கற ஒரு அசாதாரணமான பழங்காலத்து கோவிலுக்கு தான் போகப்போறோம். இந்த கோவிலுக்குள்ள சரித்திரத்தையே மாற்றி எழுதற மாதிரியான நம்பவே முடியாத சிற்பங்கள் இருக்கு. இந்த chamber குள்ள நுழையும்போது உங்க கண்கள் இயல்பா, கருவறைக்கு உள்ள இருக்கிற தெய்வத்த நோக்கி தான் போகும். ஆனா கதவுக்கு மேல பாருங்க!

இந்த கதவு நெலயில நிறைய petterns அ பார்க்கலாம். அதெல்லாம் என்ன? அதுங்க எல்லாம் என்ன சொல்ல வருது? ஒருவேள அதெல்லாம் வெறும் அலங்காரத்துக்காக செதுக்கப்பட்ட அர்த்தமில்லாத petterns ஆ?
இல்ல! நாம கொஞ்சம் கிட்ட போய் இதையெல்லாம் பாப்போம்! Chemistry class ல நாம வேற வேற அணுக்களால ஆன மூலக்கூறுகள் அதாவது molecules பத்தி படிச்சிருக்கோம். இதெல்லாம் molecules ஆ?
இல்ல, இதெல்லாம் வெறும் பூ design தானா? இது உங்களுக்கு வானத்தில் இருக்கிற நட்சத்திரங்கள ஞாபகப்படுத்தல?

Yes. இதெல்லாம் தான் 27 நட்சத்திரங்கள் ன்னு சொல்லப்படுற lunar stations. நீங்க இந்த நட்சத்திர கூட்டங்கள ராத்திரி வானத்துல பார்க்கலாம். Lunar stations உங்க ர வார்த்த ரொம்ப fancy யா இருக்குல்ல? என்னது அது? இது space station மாதிரியான எதுவும் இல்ல. இப்ப வானத்தையே எடுத்துக்குங்க.

நீங்க நட்சத்திர கூட்டங்கள ஒவ்வொரு பகுதிக்கும் அடையாளமா வச்சு அதை நாம 27 பகுதிகளா பிரிக்க முடியும். ஒவ்வொரு பகுதியும் ஒரு நட்சத்திரம் அதாவது star system ன்னு செல்லப்படுது. ஏன்?

நேரம், தேதி, பருவங்கள் எல்லாத்தையும் இந்த நட்சத்திரங்கள வச்சு calculate பண்ண முடியுங்குறதுனால தான். இன்னிக்கு நிறைய பேர் இதெல்லாம் astrology க்கு மட்டும் தான் உபயோகப்படுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா பழங்காலத்தில மனிதர்கள் எப்படி ராத்திரியில நேரத்த கணிச்சாங்கங்கங்கரத பத்தி நினைச்சு பாருங்க!?
ராத்திரியில எப்படி டைம் சொல்றதுங்குறதுக்கு அவங்க indicator எதுவும் வைக்கலையா? இல்ல! நட்சத்திரம், நட்சத்திர கூட்டம் இதுங்களோட position அ follow பண்ணியே நீங்க நேரத்த சொல்ல முடியும் So, இந்த நட்சத்திரங்கள் astronomy லயும் பயன்படுத்தப்பட்டிருக்கு.

ஆனா இந்த சிற்பங்கள் எல்லாம் உண்மையில lunar stations அ தான் காமிக்கிதா? இல்ல, நான் சும்மா guess பண்றேனா நீங்க, செதுக்கப்பட்ட இந்த எழுத்துக்கள இங்க பார்க்கலாம், இதெல்லாம் பழங்காலத்து தமிழ் பாஷையில தான் எழுதப்பட்டிருக்கு. இன்னைக்கு கூட இத என்னால படிக்க முடியும், இங்க, இது "உத்தரம்" னு சொல்லுது, இங்க, இது" பூரம்" னு சொல்லுது. இது சமஸ்கிருதத்தில " பூர்வா " ன்னு செல்லப்படுது. இதெல்லாம் நட்சத்திரங்கள்ங்கிற lunar stations ஓட பெயர்கள். தெளிவா ஒவ்வொரு கட்டத்துக்கு கீழேயும் எழுதப்பட்டிருக்கு. ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும் நாம ஸ்டார் ஓட வடிவத்தையும் position ஐயும் பார்க்கலாம்.
.
So, இதுங்க எல்லாம் உண்மையில நட்சத்திரங்கள் தான்கிறதுல இப்ப எந்த சந்தேகமும் இல்ல. அதுவும் இல்லாம, இந்த எழுத்துக்களும் சில முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்லுது. இதெல்லாம் பழைய வகை எழுத்துக்கள். இன்னிக்கு தமிழ்மொழியில பயன்படுத்தப்படற எழுத்துக்கள விட இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. அவங்க" ம் ம்" ங்குற sound அ குறிக்க ஒரு பெரிய வட்டத்த உபயோகப்படுத்தி இருக்காங்க, இது நாம இந்த காலத்துல தமிழ எழுதற மாதிரி இல்ல.
இது இந்த சிற்பங்கள் எல்லாம் பழங்காலத்தில செதுக்கப்பட்டதுங்கிறத உறுதிப்படுத்துது.

ஆனா இந்த சிற்பங்கள் எல்லாம் இந்த பழமையான கோவில் ல இருக்க வேண்டிய சிற்பங்களே இல்ல. இந்த details எல்லாம் இந்த சிற்பங்கள் காட்ட வேண்டியது இல்ல. ஏன் நான் இத சொல்றேன்? இந்தக் கட்டத்துக்குள்ள பாருங்க: இது "மகா" ன்னு சொல்லப்படுது.
நீங்க இங்க, நாலு stars சேர்ந்து ஒரு lunar station அ வடிவமைச்சு இருக்கிறத தெளிவா பார்க்கலாம். இது இப்போதைய astronomy ல Regulus னு சொல்லப்படுது. ஆனா ஒரு விசித்திரமான feature என்னன்னா இந்த Regulus அல்லது Magha ங்கர நட்சத்திரக் கூட்டம் சாதாரணமா நம்ம கண்ணுக்கு ஒரே ஒரு star மாதிரி தான் தெரியும்.

நீங்க ஒரு Telescope அ use பண்ணும் போது தான் இது Regulus A, B, C, D ன்னு நாலு stars ஆல ஆனது அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறோம். அப்படி இருந்தும் இந்த நாலு stars ம் அதோட positions ம் Magha ங்கற பேருக்குள்ள கச்சிதமா செதுக்கப்பட்டு இருக்கு. So, ஒரு advance ஆன telescope அ உபயோகப்படுத்தாம எப்படி பழங்கால சிற்பிகளால இந்த விவரங்கள செதுக்க முடிஞ்சது? இங்க இன்னான்னு! இந்த எழுத்துக்கள் இத" ரேவதி" ன்னு சொல்லுது. மாடர்ன் astronomy ல இது "Zeta Piscium" றத குறிக்குது. இது ஒரு"quintuple ஸ்டார் சிஸ்டம்". அதாவது அஞ்சு நட்சத்திரங்களான ஆனது. Quintuple னா அஞ்சு.

ஆனா, மறுபடி, இந்த அஞ்சு starsம் சாதாரணமா வெறும் கண்ணுக்கு தெரியாது. இந்த அஞ்சு stars அயும் பாக்கணும்னா நமக்கு ஒரு telescope வேணும். ஆனா, ஆச்சரியமா இந்த அஞ்சு stars ம் அதோட positions ம் கனகச்சிதமா இந்த பழங்கால கோவில்ல செதுக்கப்பட்டிருக்கு.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #tamilnadutemples #pudhukottai

Comment