விதியால் பந்தாடப்பட்ட நம் வாழ்க்கை.. மங்காமல் முருகன் அருளால் கன்றாத வளத்திற்கு நல் வழி காட்டுவான்.. முருகன்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முருகா! .. உலக மாயைகளில்
ஆசை மிகுந்து, எனது ஆவி நைந்து மங்காமல் அருள்.
பந்துஆடி அம்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த ...... குழல்மீதே,
பண்புஆர் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கேருகம் கொள் ...... முகமீதே,
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
வன் பாதகம் செய் ...... தனமீதே,
மண்டுஆசை கொண்டு விண்டு, ஆவி நைந்து
மங்காமல் உன்தன் ...... அருள்தாராய்.
கந்தா! அரன் தன் மைந்தா! விளங்கு
கன்றா முகுந்தன் ...... மருகோனே!
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
கண்டா! அரம்பை ...... மணவாளா!
செந்தாது அடர்ந்த கொந்துஆர் கடம்பு
திண்தோள் நிரம்ப ...... அணிவோனே!
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
திருப்புகழ்
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த ...... குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் ...... முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் ...... தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற ...... னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் ...... மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை ...... மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப ...... அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த ...... பெருமாளே.