உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணையின் நட்சத்திரம் என்ன?
திருமண வயதை எட்டிப்பிடித்த ஆண் பெண் இருபாலாருக்குமே தங்கள் வாழ்க்கைத் துணை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அத்தை மகன், மாமன் மகள் என்று உறவில் திருமணம் செய்வதாக இருந்தாலோ, அல்லது காதலித்து திருமணம் செய்பவர்களுக்கும், இந்த கேள்வி எழாது. மாறாக ஜாதகம் பார்த்து, பொருத்தம் அமைந்து, அதன் பிறகு பெண் பார்த்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்பவர்களுக்குத்தான் அதிகபட்சமான ஆவல் எதிர்பார்ப்பு இருக்கும். இதற்கு முன் வரன் அமையும் திசை, தூரம், இட அமைப்பு போன்ற விபரங்களை வீடியோ பதிவாக பார்த்தோம். இந்த பதிவில் வரக்கூடிய கணவன் அல்லது மனைவியின் நட்சத்திரம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை தோடுவோம்.