#மாடு #சுழி #மாடுசுழி
மாட்டுக்கு நன்மை செய்யும் சுழிகள் வீடியோ லிங்க்
https://www.youtube.com/watch?v=Bm-JGWl3t9s&t=218s
மாட்டுக்கு சுழிகள் முக்கியமா | பதினொரு சுழிகள்
_________________________________________________
ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நாம் இந்த முறை பார்க்கப்போவது, மாடுகளின் சுழிகள் பற்றி. அதாவது, தலை எழுத்து நன்றாக இருந்தால், எல்லாம் நன்றாக இருக்கும் என்பர். அதுபோல் மாடு வாங்கும் போது அதுவும் குறிப்பாக நாட்டு மாடுகளை வாங்குமு் பொழுது சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்பது அந்த காலத்தில் இருந்தே இருந்து வரும் நம்பிக்கை ஆகும்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதற்கு பல்வேறு கருத்த மாற்றங்கள் இல்லாமல் இல்லை. சுழி அவசியம் முக்கியம் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், மனுசன் சுழி நல்லாயிருந்தா மாடு சுழி ஒன்னும் பன்னாது என்ற நம்பிக்கை உள்ளவர்களும் இங்கு உண்டு. சுழிகளை எல்லாம் பார்ப்பதே இல்லை. மாடு எனக்கு பிடித்திருந்தால்போதும், அது எப்படி மாடாக இருந்தாலும் அதை நான் வளர்ப்பேன் என்று கூறியவர்களும், அப்படி வளர்த்து ஜல்லிக்கட்டு முதல் ரேக்ளா ரேஸ் வரை பெயர் வாங்கிக் கொடுத்த மாடுகளும் நிச்சயமாக உள்ளது.
அப்படியானால் சுழி என்பது மூட நம்பிக்கையா என்ற கேள்விக்கு, இது அவரவர் நம்பிக்கை என்ற பதிலைத்தான் நாம் சொல்ல முடியும். நாம் எதை நம்புகின்றோமோ ? அதுவே நமக்கு உண்மையாக தெரியும் தவிர, அதுவே உண்மை ஆகிவிடாது என்பதே உண்மை. மாடுகளுக்கு இந்தந்த சுழி இருந்தால்தான் நல்லது என்று வீட்டில் உள்ள மூத்தவர்கள் கூறியதை கேட்டே வளர்ந்த தலைமுறையினர் சுழிகள் மீது நம்பிக்கை கொள்வதில் ஆச்சர்யமில்லை. அதே நேரத்தில் சுழிகள் காரணத்தால் மாடுகள் ஒதுக்கப்பட்டு, அடிமாடுகளாக மாறும் அவல நிலைதான் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
ஆதலால் சுழிகள் நல்லாதா ? கெட்டதா ? தேவையா ? தேவையில்லையா என்ற விவாதத்திற்கு செல்வதற்கு முன், சுழிகள் என்பது இயற்கையாகவே மாடுகளின் உடலில் தோன்றப்படும் ஒன்றாகும். இது ஒவ்வொரு மாடுகளுக்கும் வேறுபடும். இதை வைத்துக் கொண்டு, நல்ல மாடுகள் இவைதான் என்று தீர்மானிப்பது அரிதான விசயம். நல்ல சுழி உள்ள மாடுகளும், களத்தில் கோட்டைவிட்ட கதைகள் இங்கு நிறைய உண்டு. இருப்பினும் சுழிகள் குறித்து தெரிந்து கொள்வதன் அவசியம் ? என்னவென்றால் நம் முன்னோர்கள் சுழிகள் குறித்து கூறிய விதமும், அதன் பொருளும் என்ன என்பதை அறிதல் மட்டுமே.
சரி, இப்பொழுது தீமை தரும் சுழிகள் குறித்து பார்ப்போம். மாடுகளுக்கு மொத்தம் 16 சுழிகள் கூறப்படுகிறது. அது என்னென்ன சுழிகள் என்பதை பார்ப்போம்.
1) முக்கண் சுழி / அக்கினி சுழி
2) குடைமேல் குடை சுழி
3) விலங்கு சுழி
4) பாடை சுழி
5) பெண்டிழந்தான் சுழி
6) நாகப்பட சுழி
7) தட்டுச் சுழி
8) துடைப்பை சுழி
9) புட்டாணிச் சுழி
10) படைக்கட்டு சுழி
11) எச்சுப்புள்ளி
12) இறங்குயூரான் சுழி
13) பூரான் கெளவல் சுழி
14) வால் முடங்கிச் சுழி
15) இறங்கு நாக சுழி
16) கருநாகச் சுழி
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US
💓Online Web Tv : https://hellomaduraitv.com/
💓 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
💓 Hello Madurai News website : https://hellomadurai.in/
💓 Agri News website : https://tamilvivasayam.com/
💓 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________