உடலில் வைட்டமின்-D குறைபாடு என்பது சாதாரண விசயமா அல்லது கவனிக்க வேண்டிய விசயமா?
”சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்து. ஆனால் உலகளாவில் வைட்டமின் டி குறைபாட்டால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உடலில் கால்சியம், மக்னீஷியம், பாஸ்பேட் ஆகியவற்றை உடலில் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. உடலில் வைட்டமின்கள் போதிய அளவு இருந்தால் மட்டுமே எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும். வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசை வலி், எலும்பு மற்றும் மூட்டு வலி, எலும்பு முறிதல் போன்ற பிரச்னை ஏற்படும். இதன் விளைவாக சிலருக்கு ஆஸ்டியோபோரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆர்த்திரிடிஸ் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
- ஆத்ம ஞான மையம்