கொழுக்கட்டை,மோதகம் உடையாமல் இலகுவாக செய்யலாம். அடுப்பில் சர்க்கரையை காய்ச்சி அதில்
அவித்த பயறு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் மூன்றையும் சேர்த்து கிளறவும். இப்படி உள்ளீடு செய்யுங்கள் கொழுக்கட்டை உடையாது. அதைவிட மறுநாளும் வைத்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. இது எங்கள் பாரம்பரிய ஒரு இனிப்பு சிற்றுண்டி ஆகும். இது ஆடிப்பிறப்பு,நவராத்திரி,விநாயகர் சதுர்த்தி போன்ற பூசை நிகழ்வுகளுக்கு விசேஷமாக செய்வார்கள்.
தேவையான பொருட்கள் :
1.வறுத்த பாசிப்பயறு / Roasted mung dal (steamed) - 200 g
2.தேங்காய் பெரிது / Coconut - 1
3.சர்க்கரை (கறுப்பு வெல்லம்) / Black jaggery - 200 g
4.சீனி / Sugar - 200 g
5.வறுத்த சிவப்பரிசி மா / Roasted red rice flour - 1 cup
6.அவித்த மைதாமா / Steamed maida - 1 cup
7.ஏலக்காய் - 7 or 8
8.உப்பு / Salt - சிறிதளவு
9.அவித்த மைதாமா / Steamed maida - சிறிதளவு (கொழுக்கட்டை பிடிக்கும் போது தேவை)